Husband And Wife Suicide: குடும்ப தகராறில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை; குழந்தைகள் பரிதவிப்பு..!

சென்னையில் அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, கணவன் மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Husband And Wife Suicide: குடும்ப தகராறில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை; குழந்தைகள் பரிதவிப்பு..!
Hanging Suicide (Photo Credit: Pixabay)

ஜூன் 13, ஆவடி (Chennai News): சென்னையில் உள்ள ஆவடி அருகே அண்ணாமலை நகர், பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த தம்பதி பிரகாஷ் (வயது 40)-சத்யா (வயது 36). பிரகாஷ் ஆவடி காய்கறி சந்தையில் மூட்டை தூக்கும் வேலை செய்து வந்துள்ளார். இத்தம்பதிக்கு தீபக் என்ற மகனும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். பிரகாஷுக்கு வேறொரு பெண்ணுடம் தொடர்பு இருந்துவந்துள்ளது. இதனால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. Drumstick Leaves Benefits: முருங்கைக் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..!

இந்நிலையில், நேற்று மதியம் சாப்பிட பிரகாஷ் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, மீண்டும் தகராறு ஏற்பட்டு இவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில், மனமுடைந்த சத்யா வீட்டில் உள்ள அறையில் உள்ளே சென்று கதவை பூட்டிவைத்து, அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார். இதனை பார்த்து, அதிர்ச்சியடைந்த அவரது கணவர் பிரகாஷ் தானும் வீட்டின் ஹாலில் இருந்த மின்விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பின்னர், நீண்ட நேரமாகியும் தம்பதி இருவரும் வெளியே வராததால், அருகில் உள்ளவர்கள் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் இருவரின் உடலையும் மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Jun 13, 2024 01:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).