ஜூன் 13, சென்னை (Health Tips): நம் உடலில் இரத்தணுக்கள் குறைவாக இருந்தால், இரத்த சோகை ஏற்படும். இவை உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது. இரத்த சோகை குழந்தைகளுக்கு வந்தால், நோயெதிர்ப்பு சக்தி குறைந்து, உடலில் பல்வேறு தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், இரத்த சோகை இருந்தால் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியானது சீராக நடைபெறாமல் போகும்.
இதனை சரிசெய்ய மற்றும் இரத்தணுக்களின் அளவை இயற்கையான முறையில் அதிகரிக்க முருங்கைக்கீரையை (Drumstick Leaves) சாப்பிடுவது நல்லது. இதில் இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கும் இரும்புச்சத்து மட்டுமின்றி, கால்சியம், வைட்டமின் ஏ, சி போன்றவையும் அடங்கியுள்ளது. அந்தவகையில், முருங்கைக்கீரையை (Murungaikeerai) சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இதில் பார்ப்போம்.
தெளிவான பார்வை: முருங்கைக்கீரையில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால், பார்வை பிரச்சனை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் தெளிவான கண் பார்வையை கிடைக்கும்.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: இதனை வாரந்தோறும் உணவில் சேர்த்து வந்தால், அது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Parents Killed Their Son: குடிபோதையில் தகராறு செய்த மகன்; உலக்கையால் அடித்துக்கொன்ற பெற்றோர்..!
இதய ஆரோக்கியம்: முருங்கைக்கீரை (Moringa) தொடர்ந்து சாப்பிட்டுவர, இதயம் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக ஆண்கள் முருங்கைக்கீரையை தவறாமல் சாப்பிட்டு வந்தால், அவர்களை எளிதில் வரக்கூடிய மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களின் அபாயத்தைத் தடுக்கும்.
ஞாபக திறன் அதிகரிக்கும்: குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க, முருங்கைப் பூவை நன்கு வெயிலில் உலர வைத்து பொடியாக்கி, அதனை பாலில் சேர்த்து கலந்து குடிக்க கொடுக்க வேண்டும். இதனால் கண்கள் நன்கு குளிர்ச்சியடையும்.
எலும்பு மற்றும் பற்களுக்கு சிறந்தது: முருங்கைக்கீரையில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் வலுவினை அதிகரிக்கின்றது.
புற்றுநோய்: இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருப்பதால், இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
இரத்த சோகை: இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், அது இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகையில் இருந்து விடுபட உதவுகின்றது.
சிறுநீரக செயல்பாடு: வாரம் 2 முறை முருங்கைக்கீரையை சாப்பிட்டுவர, சிறுநீரக மண்டலம் சீராக செயல்படும். மேலும், சிறுநீர் அதிகமாக வெளியேறி, உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் சிறுநீர் மூலமாக வெளியேறிவிடும்.