Bus Collied With Lorry: லாரி மீது ஆம்னி பேருந்து மோதி பயங்கர விபத்து; 4 பேர் பலி.. செங்கல்பட்டில் சோகம்.!

கடந்த சில நாட்களாகவே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாடாகும் விபத்துகளால் மக்கள் சோகம் அடைந்துள்ளனர்.

Bus Collied With Lorry: லாரி மீது ஆம்னி பேருந்து மோதி பயங்கர விபத்து; 4 பேர் பலி.. செங்கல்பட்டில் சோகம்.!
Chengalpattu, TN Accident 16 May 2024 (Photo Credit: @ANI X)

மே 16, படாளம் (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பழமத்தூர், படாளம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்னையில் இருந்து புறப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து, சென்னை - திருச்சி (Chennai Trichy NH Accident) தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டு இருந்தது. பேருந்தில் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், பேருந்து படாளம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்றபோது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி பயணம் செய்து வந்த லாரியின் (Omni Bus Collided with Lorry) மீது ஆம்னி பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. பேருந்துக்கு பின்னால் வந்த மற்றொரு பேருந்தும் விபத்தில் சிக்கியது. இதனால் தனியார் சொகுசு பேருந்தின் முன்பக்கம் பகுதியளவு முற்றிலும் சேதமடைந்தது. Accident Death Captured on Live Video: 160 கி.மீ வேகத்தில் லைவ் வீடியோ.. ரீல்சுக்காக வீடியோ எடுத்து உயிரைவிட்ட 4 பேர்.. பதறவைக்கும் இறுதி நிமிட காட்சிகள்.! 

அடுத்தடுத்து வாகனங்கள் மோதி சோகம்: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இவ்விபத்தில், பேருந்தில் பயணம் செய்த நான்கு பேர் பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 20 க்கும் அதிகமான பயணிகள் படுகாயமடைந்து அவதிப்பட்டனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் மீட்புப்படையினர், காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் யார்? என்ற விசாரணையானது நடந்து வருகிறது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த இருவேறு விபத்துகளில் 9 பேர் பலியாகி இருந்தனர். இதனிடையே, இன்று மீண்டும் விபத்து நடந்து 4 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

(The above story first appeared on LatestLY on May 16, 2024 08:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).