BJP Annamalai | DMK MK Stalin (Photo Credit: @Annamalai_K / @MKStalin X)

ஜனவரி 26, சென்னை (Chennai News): மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், அரிட்டாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை இணைந்து, சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. சுரங்கத்தை செயல்படுத்த ஏலமும் விடப்பட்ட நிலையில், மேலூர் மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் தமிழ்நாடு அரசு, சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. மேலும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மேலூருக்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருவோரிடம் பேச்சுவார்தை நடத்தினார். அதனைத்தொடர்ந்து, மத்திய அரசுத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து வந்தார்.

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து:

கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டக்குழுவினரை டெல்லிக்கு நேரில் அழைத்துச்சென்ற அண்ணாமலை, டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் என்ற கோரிக்கையை கிராம மக்கள் வாயிலாக நிலக்கரித்துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு முன்வைத்து இருந்தார். அவர் பிரதமரிடம் கலந்துவிட்டு பதில் தெரிவிப்பதாக கூறிய நிலையில், மறுநாளே டங்ஸ்டன் சுரங்க திட்டம் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மாநில அரசு நாடகமாடுவதாக அண்ணாமலையும், மத்திய அரசுதான் திட்டத்தை கொண்டு வந்தது என மாநிலத்தில் ஆளும் திமுகவும் மாறி-மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. Tamil Nadu Govt Awards: சிறந்த காவல் நிலையம், காவலர்கள் விருதை தட்டிச்சென்றவர்கள் யார்? முழு விபரம் இதோ.! குடியரசு தின கொண்டாட்டம் 2025.! 

உரிமைக்காக கொண்டாடும் திமுக:

இந்நிலையில், இன்று தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ரத்து விவகாரத்தில், சுரங்கத்தை வரவிடாமல் அரசு தடுத்ததற்கு நன்றி தெரிவித்து நடத்தப்படும் நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்கிறார். இதற்காக மதுரை செல்கிறார். இந்த விசயத்திற்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், பாஜக போராடி பெற்ற தடையை, திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு உரிமை விடுவதாகவும் தனது விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறார்.

மறக்க முடியுமா? அண்ணாமலை விமர்சனம்:

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைப்பதிவில், "ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, பிரியாணி கடை, டீக்கடை என வரிசையாக மன்னிப்பு கேட்கச் சென்ற திரு முக ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த பின்னர், தென் தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானபோது கூட, அதைக் கண்டுகொள்ளாமல், இந்திக் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த டெல்லிக்குச் சென்றதை பொதுமக்கள் மறந்துவிடவில்லை. தமிழகத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில், வேங்கைவயல் பிரச்சினை தொடங்கி, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்முறை உட்பட, பொதுமக்கள் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளின் போது, அங்கு சென்று ஆறுதல் கூறாத முதலமைச்சர் திரு முக ஸ்டாலின், தற்போது, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், விவசாயிகள் நலனுக்காக, மதுரை டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ததும், திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக உடனடியாகக் கிளம்பிச் செல்கிறார் என்றால், இந்த “டிராமா மாடல்” அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது" என தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கண்டனம்: