Girl Cheated by Youth: ஆசையாக பேசி தனிமையில் நெருக்கம்.. வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்: 26 வயது இளம்பெண் கண்ணீர் புகார்.!

திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறினால், அதனை நம்புவது எந்த மாதிரியான நிலைக்கு அழைத்து செல்லும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த செய்தித்தொகுப்பு.

Girl Cheated by Youth: ஆசையாக பேசி தனிமையில் நெருக்கம்.. வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்: 26 வயது இளம்பெண் கண்ணீர் புகார்.!
Women Abuse | Feeling Sad File Pic (Photo Credit: Pixabay)

டிசம்பர் 25, சென்னை (Chennai): சென்னையில் உள்ள அண்ணாநகர் பகுதியில் 26 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வேலை தேடி சென்ற சமயத்தில், ராஜேஷ் என்பவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. ராஜேஷ் தன்னை நடிகர் விஜயின் கணக்காளர் என்று கூறி அறிமுகம் செய்துள்ளார்.

உண்மை தெரியாமல் ஆசை வார்த்தையால் காதலில் விழுந்த இளம்பெண்: இதனை நம்பிய பெண்மணியும் - ராஜேஷும் நட்பு ரீதியாக பேசி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் தான் உங்களை காதலிக்கிறேன் என்று பெண்ணை காதல் வலையில் ராஜேஷ் வீழ்த்தி இருக்கிறார். காதல் என்ற ஆயுதத்தை பயன்படுத்தி, பெண்ணிடம் பல ஆசை வார்த்தைகள் பேசியுள்ளார்.

வீடியோ எடுத்து மிரட்டல்: மேலும், திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தனிமையில் காதல் பெயரை பயன்படுத்தி பாலியல் ரீதியாகவும் நெருங்கி இருக்கிறார். அச்சமயம் பெண்ணுக்கே தெரியாமல் தனிமையில் இருந்த காட்சிகளை வீடியோ எடுத்து வைத்துக்கொண்ட ராஜேஷ், அதனை காண்பித்து பெண்ணிடம் ரூ.10 இலட்சம் வரை பணம் பறித்து மிரட்டி இருக்கிறார். Rahul Preet Singh Convey Birthday Wish: தனது அன்பான காதலருக்கு நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை ராகுல் ப்ரீத் சிங்; என்ன சொன்னார் தெரியுமா?.! 

புகார் அளித்தும் பலனில்லை: ஒருகட்டத்தில் இளம்பெண் அங்குள்ள அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தாலும், மேற்படி உரிய நடவடிக்கை இல்லை. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்மணி நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பெண்ணின் கண்ணீர் கோரிக்கை: இந்த புகாரில் தான் ராஜேஷை நம்பி இழந்த விபரத்தை குறிப்பிட்டுள்ள பெண்மணி, அவரின் மீது வன்கொடுமை வழக்கு மட்டுமல்லாது மிரட்டி பணம் பறித்தல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

ஏமாற வேண்டாம்: பல ஆண்டுகளாக திரைத்துறையில் படவாய்ப்பு கேட்டு வருவோரை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருப்பதாக புகார்கள் குவிந்து கிடக்கின்றன.சிறிய வாய்ப்பு கிடைத்தாலாவது நடிகையாகி விடமாட்டோமா? என்று ஏங்கும் பல பெண்களின் ஏக்கத்தை தனது கேடயமாக்கி, இவ்வாறான கொடூர செயல்களில் ஈடுபடும் நபர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன.

(The above story first appeared on LatestLY on Dec 25, 2023 12:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).