Rahul Preet Singh Convey Birthday Wish: தனது அன்பான காதலருக்கு நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை ராகுல் ப்ரீத் சிங்; என்ன சொன்னார் தெரியுமா?.!

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்திற்கு பின்னர் தமிழில் பெருவாரியாக அறியப்பட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஹிந்தி நடிகர் ஜாக்கியுடன் காதல் வயப்பட்டார். இன்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு தனது வாழ்த்துக்களையும் பதிவு செய்துள்ளார்.

Rahul Preet Singh Convey Birthday Wish: தனது அன்பான காதலருக்கு நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை ராகுல் ப்ரீத் சிங்; என்ன சொன்னார் தெரியுமா?.!
Rahul Preet Singh With Jackky Bhagnani (Photo Credit: Instagram)

டிசம்பர் 25, சென்னை (Cinema News): தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான முன்னணி இந்திய திரைப்பட நடிகை ரகுல் ப்ரீத்தி சிங். பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து கன்னட மொழியில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழில் அடையாளம் தந்த தீரன் அதிகாரம் ஒன்று: தெலுங்கு சினிமாவில் மிக முக்கிய முன்னணி நடிகையாக வலம் வந்தவர், தமிழில் யுவன், தடையற தாக்க, புதுயுகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் வெற்றி பெருவாரியான அடையாளத்தை பெற்றுத்தந்தது. விரைவில் அயலான் மற்றும் இந்தியன் 2 திரைப்படங்கள் அடுத்தடுத்து இவரின் நடிப்பில் வெளியாக உள்ளன. Glenn Christmas Celebration With Son: மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய கிளன் மேக்ஸ்வெல்லும்., டேவிட் வார்னரின் அன்பு வாழ்த்தும்.! 

நடிகருடன் காதல்: கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ரகுல் ப்ரீத் சிங் பிரபல நடிகரான ஜாக்கி பக்னானியுடன் (Jackky Bhagnani) காதல் வயப்பட்டார். கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் மகிழ்ச்சியாக தங்களின் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று ஜாக்கிக்கு பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

பிறந்தநாள் வாழ்த்து: அந்த பதிவில், "இந்த மகிழ்ச்சியான நாள் போல ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்களின் கருணை, அப்பாவித்தனம் எனக்கு கிடைத்தது அரிதான விஷயம். உங்களின் நகைச்சுவை வேடிக்கையாக இருக்கும். உங்களைப் போன்ற மனிதர்கள் இனி உருவாக மாட்டார்கள். நமது வாழ்நாள் பயணத்தில் நாம் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என் காதலே" என்று பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் வேண்டுகோள்: இதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் ரசிகர்கள், விரைவில் இருவரையும் திருமணம் செய்யக்கூறி வலியுறுத்தி கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)

(The above story first appeared on LatestLY on Dec 25, 2023 12:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).