Online Gambling: ரூ.50 இலட்சம் பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால் சோகம்: மகனை கொலை செய்து, தந்தை தற்கொலை முயற்சி.!
விமான நிலைய அலுவலகத்தில் சமையலர் வேலை என குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நபர், விரைந்து பணம் சம்பாதிக்க எண்ணி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வாழ்க்கையை இழந்த சோகம் நடந்துள்ளது.
ஜனவரி 08, சென்னை (Chennai News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் கிருஷ்ணா சைதன்யா (வயது 43). இவர் சென்னை மடிப்பாக்கத்தில் தனது குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, பத்ரி என்ற மகன் இருக்கிறார். சைதன்யா தாம்பரம் விமானப்படையில் சமையலராக வேலை பார்த்து பார்த்து வருகிறார்.
ரூ.50 இலட்சம் பணம் இழப்பு: ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான சைதன்யா, அதனைத்தொடர்ந்து விளையாடி ரூ.50 இலட்சம் வரை இழந்ததாக தெரியவருகிறது. சூதாட்டத்திற்காக கடனுக்கு மேல் கடன் வாங்கி இருக்கிறார். இதனால் கடனில் மூழ்கிய சைதன்யா, குடும்பத்தை நடத்த இயலாமல் திணறி இருக்கிறார். மாதம் வாங்கும் சம்பளம் கடன் நிலுவையை செலுத்த போதவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். Tehreek i Taliban Militants Attack: பாகிஸ்தான் அரசு படையினருக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் பயங்கரவாதிகள்: 5 காவலர்கள் பலி., 25 பேர் படுகாயம்.!
மகனை கொலை செய்து தற்கொலை முயற்சி: இந்நிலையில், பணப்பிரச்னையால் அவதிப்பட்ட சைதன்யா, தனது மகன் பத்ரியை கொலை செய்தார். அதனைத்தொடர்ந்து, மெரினா கடற்கரைக்கு சென்றவர், கடலில் குதித்து தற்கொலை செய்ய முடிவெடுத்து, அதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஆனால், அவரை அதிகாரிகள் உடனடியாக காப்பாற்றிவிட்டனர்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல்: அவரிடம் நடந்த விசாரணையில் கடன் பிரச்சனையால் மகனை கொலை செய்துவிட்டு, கடலில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது. இதனையடுத்து, கிருஷ்ணா சைதன்யாவை கைது செய்த அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jan 08, 2024 09:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

