ஜனவரி 08, பாகிஸ்தான் (Pakistan News): பாகிஸ்தான் நாட்டின் அரசுக்கு எதிராக, தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பினர் பல்வேறு வகையான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களை ஒழிக்க அந்நாட்டு அரசுபடை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சில இடங்களில் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று அங்குள்ள கைபர் பக்துன்க்வா மாகாணம், பஜாவூர் மாவட்டத்தில் காவல்துறையினர் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 5 காவலர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 22 பேர் படுகாயம் அடைந்து இருக்கின்றனர். Hardik Pandya Workout: "ஒரே திசையில் செல்வோம்" - ஐபிஎல் 2024 க்காக தீவிரமாக தயாராகும் ஹர்திக்.. கடுமையாகும் உடற்பயிற்சி.!
படுகாயமடைந்த 22 பேரில், 10 பேர் தீவிர காயத்துடன் பெஷாவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் தெஹ்ரீக்-இ-தலிபான் (Tehreek-i-Taliban Pakistan TTP) பாகிஸ்தான் அமைப்பினர் தாக்குதலுக்கு பொறுப்பேற்று இருக்கின்றனர்.
पाकिस्तान के बाजौर में हुआ बड़ा धमाका।पोलियो टीम को सूरक्षा दे रही पुलिस टीम को बनाया गया निशाना।,हमले में अब तक 5 पुलिसकर्मियों की मौत,15 घायल।#Pakistan #Blast #Bajaur pic.twitter.com/HQTiebh3d0
— Nidhi solanki (@iNidhisolanki) January 8, 2024