Chennai Shocker: காதலியை கர்ப்பமாக்கி ஓட்டம்பிடித்த வடமாநில இளைஞர்; குழந்தையை குளத்தில் வீசி அதிர்ச்சி தந்த இளம்பெண்.. சென்னையில் பகீர்.!
காதலன் கர்ப்பமாக்கி விட்டு கைவிட்டு ஓட்டம் பிடித்தால், இளம்பெண் குழந்தையை பெற்றெடுத்து குளத்தில் வீசிய கொடுமை சென்னையில் நடந்துள்ளது. வடமாநில பெண்ணுக்கு, அவர் மாநிலத்து இளைஞரால் நேர்ந்த கொடுமையை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
நவம்பர் 17, ஒரகடம் (Chennai News): அசாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட 22 வயது இளம்பெண் சகீனா பேகம். இவர் அதே மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் சுமன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதனிடையே, சகீனாவுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இதனால் ஒரகடம் பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்தவர், வேலைக்கு சென்று வந்துள்ளார்.
காதலி கர்ப்பம் (Love Pregnancy):
இதனிடையே, அவரின் காதலர் சுமனும் சென்னையில் வேலை கிடைத்து வந்திருந்த நிலையில், காதல் ஜோடி அவ்வப்போது நேரில் சந்தித்து வந்துள்ளனர். அப்போது, காதலியிடம் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, ஆசையாக பேசியவர் ஒருகட்டத்தில் அத்துமீறி இருக்கிறார். இதனால் சகீனா கர்ப்பமாகி இருக்கிறார். தான் கர்ப்பமான செய்தியை காதலரிடமும் கூறியுள்ளார். TNEB JE Arrested: பெண்ணை கட்டிப்பிடித்து சில்மிஷம்; மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது.! அலுவலகத்தில் அதிர்ச்சி செயல்.!
ஓட்டம் பிடித்த காதலன்:
காதலி கர்ப்பமான செய்தியை அறிந்த காதலர் சுமன், மீண்டும் அசாம் மாநிலத்திற்கே சென்றுவிட்டார். மேலும், காதலியின் அழைப்பையும் துண்டித்து இருக்கிறார். இதனால் தான் பணியாற்றி வந்த நிறுவனத்தில் 1 மாத விடுப்பு எடுத்த பெண்மணி, காதலனை தேடி அசாமுக்கு சென்றுள்ளார். அங்கு எங்கு தேடியும் காதலன் கிடைக்காத காரணத்தால், மீண்டும் சென்னைக்கே சகீனா திரும்பி இருக்கிறார்.
குழந்தை பிரசவம்:
தற்போது ஒரகடம் பகுதியில் செயல்படும் விடுதியில் சேர்ந்த சகீனா, தனது நிறுவனத்திற்கும் வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று விடுதியில் தனியாக இருந்த சகீனா பேகத்திற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உதவிக்கு ஆட்கள் இல்லாமல், யாரையும் அழைக்கவும் இயலாமல், பெண்மணி விடுதி அறையிலே குழந்தையை பிரசவித்துள்ளார். பின் அதனை உயிருடன் குடியிருப்புக்கு அருகே இருந்த குளத்தில் வீசிவிட்டு வந்துள்ளார்.
காவல்துறை விசாரணை:
விடுதிக்கு வந்த தோழிகளிடம் தகவலை கூட, அவர்கள் குழந்தையின் உடலை குளத்தில் இருந்து மீட்டு வந்தனர்.மேலும், பெண்ணை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு வந்த காவல்துறையினர் விசாரணையைத் தொடர்ந்து, குழந்தையின் உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. மேலும், காதலி கொடுத்த புகாரின் பேரில் காதலன் சுமனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Nov 17, 2024 11:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

