Youth Arrest After Obscene Pics Shared: காதலை கைவிட்ட இளம்பெண்; தனிமை காட்சிகளை ஆன்லைனில் பதிவிட்ட காதலன்... பருவ வயது காதலால் நடந்த பகீர் சம்பவம்.!

இளம் வயதில் காதல் வயப்பட்டு, காதலனுடன் தனிமையில் சுற்றுவதும், நெருக்கமாக இருப்பது என இருந்தால், ஒருவேளை காதல் முறிவு ஏற்பட்டு காதலர் துரோகியாகும் பட்சத்தில் நடக்கும் விபரீதம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

Youth Arrest After Obscene Pics Shared: காதலை கைவிட்ட இளம்பெண்; தனிமை காட்சிகளை ஆன்லைனில் பதிவிட்ட காதலன்... பருவ வயது காதலால் நடந்த பகீர் சம்பவம்.!
Mobile Camera Capture | Girl Sad (Photo Credit: Pixabay)

டிசம்பர் 29, புதுப்பேட்டை (Chennai Crime News): சென்னையில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சபிதா (வயது 20, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அங்குள்ள பெரம்பூர் பேக்ஸ் சாலை, குட்டி தெருவில் வசித்து வருபவர் லியோனி ஜோஸ்வா தியோடர் (வயது 20). இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நட்பாக தொடர்ந்துள்ளது. ஒருகட்டத்தில் தோழர்கள் இருவரும் காதல் வயப்படவே, பல இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக சுற்றி வந்துள்ளனர். இதனிடையே, காதலன் ஜோஷ்வாவின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால், சபிதா தனது காதலரை பிரிந்து இருக்கிறார். காதலையும் முறித்துக்கொண்டுள்ளார். High Tide Waves Attack: திடீரென கடல் பொங்கி வீதிகளில் ஓடிய வெள்ளம்; உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓட்டமெடுத்த மக்கள்.!

காதலனின் மிரட்டல்: கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. காதலில் உறுதியாக இருந்த லியோனின், தொடர்ந்து சவிதாவுக்கு தொடர்பு கொண்டு மீண்டும் காதலிக்கும்படி பேசி வந்துள்ளார். வற்புறுத்தல் ஒருகட்டத்தில் மிரட்டலாக மாறியுள்ளது. இது தொடர்பான மிரட்டலை கண்டுகொள்ளாத சவிதா, தனது வேலைகளை கவனித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லியோனின் ஜோஸ்வா, தனது காதலியுடன் தனிமையில் இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சபிதா, தனது தாயிடம் நடந்ததை கூறி கதறி அழுந்துள்ளார்.

அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்: பின் இது தொடர்பாக வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல்துறையினர் ஜோஷுவா மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது காதலியை பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து ஜோஷ்வாவை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.

காதலனோ, கணவனோ யாராக இருப்பினும் தனிமை காட்சிகளை படம்பிடிக்க அனுமதி வழங்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக விளங்குகிறது இந்த சம்பவம்.

(The above story first appeared on LatestLY on Dec 29, 2023 01:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).