டிசம்பர் 29, கலிபோர்னியா (California): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம் வென்சுரா கடற்கரை பகுதியில், நேற்று பொதுமக்கள் கடற்கரையின் அழகை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் அங்குள்ள கடலில் திடீரென கொந்தளிப்பு ஏற்பட்டு, பெரிய அளவிலான அலைகள் கடற்கரையை தாக்கியது. இந்த சம்பவத்தால் பெரிய அளவிலான சேதங்கள் இல்லை எனினும், கடற்கரையோரம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எட்டு பேர் லேசான காயமடைந்தனர். மேலும், கடற்கரையை ஒட்டியுள்ள வீதிகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால், சுனாமி வந்துவிட்டதோ என மக்கள் ஒருகணம் ஆடியப்போயினர். திடீரென கடல் நீர் மட்டம் உயர்ந்ததற்கு காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. Texas Accident: அலட்சியமாக விதிகளை மீறி பயணம்; சாலை விபத்தில் எம்.எல்.ஏ உறவினர்கள் 5 பேர் பலியான விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)