மார்ச் 10, மேட்டுப்பாளையம் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆர்.டி.ஓ அலுவலகம் அருகிலேயே தாஜ் பேக்கரி செயல்பட்டு வருகிறது. இப்பகுதி சிறுமுகையின் பிரதான பகுதி என்பதால், எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும். இந்நிலையில், நேற்று அவ்வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் வந்தார். அப்போது வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரியவருகிறது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வானம் தறிகெட்டு இயங்கி, பேக்கரிக்குள் நேரடியாக பாய்ந்தது. Andhra Student Died in AUS: 20 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்த 23 வயது இளம்பெண் மரணம்; ஆஸியில்., இந்திய மாணவிக்கு நடந்த சோகம்.! 

நூலிழையில் உயிர்பிழைப்பு: விபத்தில் பெரிய அளவிலான உயிர்சேதம் இல்லை எனினும், வாகன ஓட்டி காயமடைந்தார். மேலும், பேக்கரி கடையின் உரிமையாளர் நூலிழையில் விலகி காயமின்றி உயிர்தப்பினார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. சாலைகளை பயணம் செய்யும்போது மிதமான வேகத்தில் கவனத்துடன் செல்லாத பட்சத்தில், கட்டாயம் எதோ ஒருநாள் விபத்தில் சிக்கவேண்டியது இருக்கும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதுவே எதிர்காலத்தில் நடக்கும் விபத்துகளை தவிர்க்க வழிவகை செய்யும்.

மிதமான வேகத்தில் கவனத்துடன் பயணிப்போம்! விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்!!