Vemuru Ujvala (Photo Credit: @TeluguScribe X)

மார்ச் 10, பிரிஸ்பேன் (World News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி வேமுறு உஜ்வலா (வயது 23). இவர் தனது நண்பர்களுடன் ஆஸ்திரேலியாவில் சுற்றுலாப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இவர்கள் அனைவரும் சம்பவத்தன்று லாமிங்டன் தேசியப்பூங்காவில் (Yanbacoochie Falls, Lamington National Park), யான்பச்சூச்சியே நீர்வீழ்ச்சியில் மலையேற்ற பயணம் மேற்கொண்டு இருந்தனர்.

6 மணிநேர போராட்டத்திற்கு பின் உடல் மீட்பு: அச்சமயம் உஜ்வாலா எதிர்பாராத விதமாக அவரின் கேமிரா பள்ளம் ஒன்றில் விழுந்துவிட, அதனை மீட்கும் முயற்சி தோல்வியுற்றதில் 20 மீட்டர் ஆழமுள்ள பள்ளம் ஒன்றில் அவர் தவறி விழுந்தார். இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், உஜ்வலாவின் உடலை 6 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். Minor Girl Beaten by Stray Dogs: வீட்டு வாசலில் இருந்த சிறுமியை தாக்கிய தெரு நாய்கள்; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.! 

மருத்துவக்கல்லூரி மாணவி: விரைவில் அவரின் உடல் இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றனர். விசாரணையில், வேமுறு உஜ்வாலா ஆஸ்திரேலியாவில் உள்ள பாண்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ் பயின்று வந்துள்ளார். அவர் அங்கேயே மருத்துவராக பணியாற்றி, மேற்படிப்பை தொடரவும் சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

நண்பர்கள் & குடும்பத்தினர் சோகம்: மருத்துவ படிப்பு முடிந்து மேற்படி அங்கு பணியாற்றவும், மேற்படிப்பு படிக்கவும் அனுமதி கிடைத்ததால் தனது நண்பர்களுடன் உற்சாகமாக மலையேற்ற பயணம் மேற்கொண்ட பெண்மணி உயிரிழந்தது அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.