Neyveli NLC: நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் விபத்து; தொழிலாளி பலி.!
மண் அள்ளும் இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளி, நெய்வேலி சுரங்கத்தில் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
ஆகஸ்ட் 06, நெய்வேலி (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி (Neyveli NLC Accident) என்.எல்.சி சுரங்கம், தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களுக்கு தேவையான மின் உற்பத்தியை செய்து வருகிறது. இதற்காக பல சுரங்கங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக எதிர்காலத்திற்கு தேவையான பழுப்பு நிலக்கரியை எடுக்கவும் திட்டமிடப்பட்டு, அதற்கான நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. Trichy Shocker: காவேரி வெள்ளப்பெருக்கை வேடிக்கை பார்க்க வந்த 17 வயது சிறுவன் கொடூர கொலை; போதை கும்பல் அட்டூழியம்.!
அதிகாரிகள் விசாரணை:
இந்நிலையில், நெய்வேலி என்.எல்.சி சுரங்கம் 1 ஏ-வில், மண் அள்ளும் இயந்திரத்தில் சிக்கி, அங்கு பணியாற்றி வந்த தொழிலாளி குழந்தைவேல் (45) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலை மீட்ட அதிகாரிகள், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையும் நடந்து வருகிறது. தகவல் அறிந்த குழந்தைவேலின் உறவினர்கள் மருத்துவமனைக்கு கண்ணீருடன் விரைந்துள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Aug 06, 2024 08:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

