Trichy Shocker: காவேரி வெள்ளப்பெருக்கை வேடிக்கை பார்க்க வந்த 17 வயது சிறுவன் கொடூர கொலை; போதை கும்பல் அட்டூழியம்.!
மதுபோதையில் இருந்த கும்பல் 17 வயது சிறுவனை, ஏரியா விட்டு ஏரியா எதற்காக வந்தாய்? என கேள்வி எழுப்பி படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
ஆகஸ்ட் 05, விராலிமலை (Trichy News): புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை (Viralimalai), அன்பு நகர் பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித் கண்ணன் (வயது 17). இவர் திருச்சியில் உள்ள தந்தை பெரியார் கலை & அறிவியல் கல்லூரியில், பிஎஸ்.சி முதல் ஆண்டு பயின்று வருகிறார். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், கணபதி நகரில் ரஞ்சித்தின் உறவினர் வீடு இருக்கிறது. அங்கு சென்ற ரஞ்சித் கண்ணன், காவேரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை உறவினர் சந்தோஷுடன் நேரில் பார்க்க சென்றுள்ளார்.
கல்லூரி மாணவர் பரிதாப பலி:
ஆற்றங்கரையில் இவர்கள் காவேரியின் அழகை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க, அதே பகுதியில் 5 பேர் கும்பல் மதுபானம் அருந்திவிட்டு வந்து ரஞ்சித் கண்ணனிடம் வம்பிழுத்து தகராறு செய்துள்ளது. வெளியூரை சேர்ந்த உனக்கு இங்கு என்ன வேலை? எதற்கு வந்தாய்? என உருட்டுக்கட்டை கொண்டு தாக்கி இருக்கிறது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ரஞ்சித், நிகழ்விடத்தில் மயங்கிச் சரிந்தார். Dindigul Accident: தொழிலதிபரின் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் துள்ளத்துடிக்க பலி; திண்டுக்கல்லில் பயங்கரம்.!
3 சிறார்கள் உட்பட 5 பேர் கைது:
அங்கிருந்தவர்கள் ரஞ்சித்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், ரஞ்சித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். மதுபோதையில் ரஞ்சித்தை நவீன் குமார், விஜய், 17 வயதுடைய சிறார்கள் உட்பட 5 பேர் கும்பல் கொலை செய்தது உறுதியாகவே, அவர்களை அதிகாரிகளை சிறையில் அடைத்தனர்.
(The above story first appeared on LatestLY on Aug 05, 2024 08:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

