Father Killed Son: வாக்குவாதம் முற்றியதால் விபரீதம்; 47 வயது மகனை சரமாரியாக குத்திக்கொன்ற தந்தை.!
அடிக்கடி தந்தை மகனிடையே எழுந்த குடும்பச்சண்டையில், இறுதியில் மகன் தந்தையால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
நவம்பர் 08, வேப்பூர் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் (Veppur Murder), பாசார் கிராமத்தில் வசித்து வருபவர் ஆறுமுகம் (வயது 70). இவரின் மகம் முத்துசாமி (வயது 47). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். தந்தை - மகன் இடையே அவ்வப்போது குடும்பப்பிரச்சனை நிலவி வந்துள்ளது. இதனால் இருவரும் அவ்வப்போது வாக்குவாதம் செய்வது, பின் அமைதியாவதும் சாதாரணமானது என கூறப்படுகிறது.
தந்தை - மகன் வாக்குவாதம்:
இதனிடையே, நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12 மணிக்கு மேல், இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி இருக்கிறது. இதனால் ஆறுமுகம் கோபமடைந்த நிலையில், வீட்டில் இருந்த தனது பொருட்களை எடுத்து, வீட்டில் இருந்து வெளியேறி அங்குள்ள மரத்தடியில் இருந்துள்ளார். Drug Smuggling: போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவியாக 25 வயது இளம்பெண்; தந்தையின் தொழிலை கையில் எடுத்து ஷாக்.!
சரமாரியாக கத்திக்குத்து:
பின் சிறிது நேரம் கழித்து அங்கு வந்த முத்துசாமி, தனது மகன் ஆறுமுகத்தை சரமாரியாக கத்தியால் குத்தி இருக்கிறார். இதனால் முத்துசாமி அலறவே, பதறியடித்து வந்த பொதுமக்கள் முத்துசாமியை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
பரிதாப பலி:
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்து வந்த வேப்பூர் காவல்துறையினர், ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து ஆறுமுகத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Nov 08, 2024 08:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

