Chennai Durg Case Arrest 07-Nov-2024 (Photo Credit: @EPSPeravai2026 X)

நவம்பர் 08, நீதிமன்றம் (Chennai News): சென்னையில் உள்ள நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை என்பது கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து இருந்தது. போதைப்பொருள் கடத்தல் (Drug Smuggling in Chennai) மற்றும் விற்பனை கும்பலை கண்காணித்து கைது செய்ய போதைப்பொருள் ஒழிப்பு நுண்ணறிவு படை சிறப்புக்குழுவாக செயல்பட்டு வந்தாலும், போதைப்பொருள் விற்பனை என்பது தொடர்ந்து அதிகரித்தது. ஹெராயின், மெத்தபெட்டமைன் என சர்வதேச அளவில் மிகப்பெரிய தொகையில் விற்பனையாகும் தடை செய்யப்பட்ட பொருட்களும் இங்கு சர்வ சாதாரணமாக கிடைக்கத் தொடங்கின.

சிறப்புக்குழு அமைத்து விசாரணை:

இதனிடையே, சென்னை மாநகர (Chennai City Police) காவல் ஆணையராக பொறுப்பேற்ற அருண் குமார், போதைப்பொருள் தொடர்பான கும்பலை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு குழு ஒன்றை அமைத்து இருந்தார். மேலும், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபடவும் அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றம் பகுதியில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். Suriyanarkoil Adheenam: 54 வயதில் 47 வயது பக்தையை கரம்பிடித்த கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீன மடாதிபதி.! 

இளம்பெண்ணுடன் நால்வர் கும்பல் பிடிப்பு:

அப்போது, அங்கு வந்த 6 பேர் கும்பல் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த நிலையில், அவர்களை விசாரிக்க முற்பட்டபோது ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் விரட்டிப்பிடித்ததில் நால்வர் கைது செய்யப்பட்டனர். 2 பேர் தலைமறைவாகினர். இந்த விவகாரத்தில் பெண் ஒருவரும் (25 Year Old Woman Lead Drug Smuggling Gang) கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தகவல் அம்பலமானது.

தந்தையின் தொழிலில் மகள்:

அதாவது, மௌஸியா என்ற 25 வயது இளம்பெண், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து போதைப்பொருளை விற்பனை செய்து வந்தது அம்பலமானது. இவர் இளைஞர்கள், இளம்பெண்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கு போதைப்பொருளை விற்பனை செய்து வந்துள்ளார். குறிப்பாக பப்கள், இரவு நேர பார்ட்டிகளில் கலந்துகொள்ளும் நபர்களை குறிவைத்து அதிகம் போதைப்பொருள் விற்பனை நடந்துள்ளது. இந்த பெண்மணியிடம் இருந்த 7 கிராம் அளவிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டது. Big News: தமிழகமே அதிர்ச்சி.. 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற 14 வயது சிறுவன்..! 

போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவி கைது:

மௌசியாவின் தந்தையான அக்பர் அலி, கடந்த 2021ம் ஆண்டுக்கு முன்பில் இருந்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளார். அந்த ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரை 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தந்தையின் கைதுக்கு பின்னர், அவரின் கூட்டாளிகளுடன் சேர்ந்து, தந்தையின் தொழிலை கையில் எடுத்த இளம்பெண், இன்று போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவியாக செயல்பட்டு சென்னை & புறநகர் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையை முன்னெடுத்து இருக்கிறார் என்பது அம்பலமானது.