Heart Attack: பாடம் எடுக்கும்போதே வகுப்பறையில் சோகம்; ஆசிரியர் மாரடைப்பால் மரணம்.! ஈரோட்டில் துயரம்.!

மதிய உணவு இடைவெளிக்குப்பின் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டு இருந்த ஆசிரியர், மயங்கிச் சரிந்து உயிரிழந்த சோகம் அந்தியூர் அருகேயுள்ள கிராமத்தில் நடந்துள்ளது.

Heart Attack: பாடம் எடுக்கும்போதே வகுப்பறையில் சோகம்; ஆசிரியர் மாரடைப்பால் மரணம்.! ஈரோட்டில் துயரம்.!
Class Room | Heart Attack (Photo Credit: PIxabay)

நவம்பர் 07, அந்தியூர் (Erode News): ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர், பூதப்பாடி கிராமத்தில் வசித்து வருபவர் அந்தோணி ஜெரால்ட் (வயது 49). இவர் பர்கூர் வனப்பகுதியில் உள்ள சுண்டப்பூர் மலை கிராமத்தில் இருக்கும், ஊராட்சி ஒன்றிய (School Teacher Dies by Heart Attack) நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அந்தோணிக்கு மனைவி மற்றும் மகன் இருக்கின்றனர். இந்நிலையில், நேற்று இவர் வழக்கம் போல காலை பள்ளிக்கு வந்தவர், மதிய உணவு வேளையில் சாப்பிட்டு விட்டு, பின் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டதாக தெரிய வருகிறது. Tambaram Shocker: தீபாவளி தகராறு கொலையில் முடிந்த பயங்கரம்; பதிலுக்கு பதில் சரமாரி வெட்டு., பறிபோன உயிர்.! 

மாரடைப்பால் சோகம்:

அப்போது திடீரென உடல்நிலை மோசமாகி, நாற்காலியில் அமர்ந்தவர் அப்படியே மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பறையில் மயங்கி விழுந்து சுருண்டார். இதனைக்கண்ட மாணவர்கள் அதிர்ச்சியில் கூச்சலிட்ட நிலையில், சக ஆசிரியர்கள் அவரை அவசர ஊர்தி மூலமாக மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஆசிரியர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அந்தியூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Nov 07, 2024 09:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).