Baby Hand File Pic (Photo Credit: @LatestLY X)

ஏப்ரல் 28, திருவெறும்பூர் (Tiruchirappalli News): திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் (Thiruverumbur) பகவதிபுரம் பகுதியை சேர்ந்த தம்பதி கார்த்திக் - தாரணி. இத்தம்பதிக்கு 3 வயதில் சைலேஷ் என்ற மகன் இருந்தார். இந்நிலையில், தாரணி இரண்டாவது பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், மகன் சைலேஷை அவரது பாட்டி வீட்டில் விட்டு சென்றுள்ளனர். Madurai News: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஸ்விக்கி ஊழியரின் அதிர்ச்சி செயல்.!

3 வயது குழந்தை பலி:

அங்கு அவனுடைய அத்தை உணவு ஊட்டிய போது மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக (Child Death) தெரிவித்தனர். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.