Kallakurichi Shocker: வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலர் மீது தாக்குதல்; போதை இளைஞர்கள் அட்டகாசம்.!

இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த காவல் உதவி ஆய்வாளர் மீது, போதை இளைஞர்கள் சேர்ந்து தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது.

Kallakurichi Shocker: வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலர் மீது தாக்குதல்; போதை இளைஞர்கள் அட்டகாசம்.!
Kallakurichi Drunken Youth Atrocity (Photo Credit: Facebook)

ஆகஸ்ட் 02, திருக்கோவிலூர் (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் (Tirukoilur) நகரில், நேற்று காவல்துறை அதிகாரிகள் சார்பில் வாகன தணிக்கை சோதனை நடைபெற்று வந்தது. அச்சமயம் முகக்கவசம் அணியாமல், விதிகளை மீறி இருசக்கர வாகனத்தில் மூவர் கும்பல் ஒன்று பயணம் செய்தது. Sattur Accident: இருக்கன்குடி கோவிலுக்கு சென்ற பாதையாத்திரை பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்; லாரி மோதி 3 பேர் பலி.! 

போதை கும்பலின் அடாவடி செயல்:

இவர்களை கவனித்த காவல் அதிகாரி வாகனத்தை நிறுத்த முற்படவே, இளைஞர்கள் கும்பல் அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தது. இதனையடுத்து, பணியில் இருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் கும்பலை தடுத்து நிறுத்தினார். ஏற்கனவே இளைஞர்கள் கும்பல் கஞ்சா மற்றும் மதுபோதையில் இருந்ததாக தெரியவருகிறது.

மூவரும் கைது:

இதனால் அவர்கள் காவல் உதவி ஆய்வாளரை தாக்கி தகராறு செய்துள்ளனர். இந்த விஷயத்தை நேரில் கவனித்த அதிகாரிகள், செய்வதறியாது திகைத்தனர். மேலும், சட்டம் ஒழுங்கு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நேரில் வந்த அதிகாரிகள், தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.

அங்கு இளைஞர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

(The above story first appeared on LatestLY on Aug 02, 2024 01:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).