Sattur Accident: இருக்கன்குடி கோவிலுக்கு சென்ற பாதையாத்திரை பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்; லாரி மோதி 3 பேர் பலி.!
நேத்திக்கடனை செலுத்த பாதையாத்திரையாக இருக்கன்குடி நோக்கி பயணித்தவர்கள் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
ஆகஸ்ட் 02, சாத்தூர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், இருக்கன்குடி (Irukkangudi Mariamman Temple) மாரியம்மன் கோவில் பிரசித்திபெற்ற அம்மன் தளங்களில் ஒன்றாகும். ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு (Aadi Perukku) கொண்டாட்டங்களை முன்னிட்டு, இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் திரளாக செல்வார்கள். சிலர் பாதை யாத்திரை வாயிலாகவும் கோவிலை சென்றடைவது உண்டு. TN Weather Update: காலை 10 மணிவரையில் 4 மாவட்டங்களில் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
பக்தர்கள் மீது லாரி மோதி விபத்து:
இந்நிலையில், சாத்தூர் பகுதியில் உள்ள கன்னியாகுமரி - மதுரை (Kanyakumari Madurai National Highway) தேசிய நெடுஞ்சாலையோரம் நடந்தவாறு பக்தர்கள் பாதை யாத்திரை பயணமாக இருக்கன்குடி நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தனர். அச்சமயம், அவ்வழியே வந்த லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பாதையாத்திரை பயணம் மேற்கொண்டு இருந்த மகேஷ், பவுன்ராஜ், முருகன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
லாரி ஓட்டுநர் கைது:
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா காவல்துறையினர், விபத்தில் பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Aug 02, 2024 09:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

