Teacher Arrested by Pocso Act: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்ஸோவில் கைது.!

வகுப்பறைகளில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லையை கொடுத்து வந்த ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

Teacher Arrested by Pocso Act: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்ஸோவில் கைது.!
Teacher Soundarrajan Sexual Harassment File Pic (Photo Credit: Facebook / Pixabay)

ஏப்ரல் 06, உளுந்தூர்பேட்டை (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, சேந்தமங்கலம் கிராமத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக சௌந்தர்ராஜன் என்பவர் பணியாற்றி (Ulunthurpet Teacher Harassed Girl Students) வருகிறார். கடந்த சில மாதமாகவே சௌந்தர்ராஜன் தன்னிடம் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை மாணவிகளும் வெளியே கூற இயலாமல் தவித்து வந்துள்ளனர். Minor Girl Dies by Suicide: 3 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; மனமுடைந்த சிறுமி தற்கொலை.. 10 நாட்கள் ஊசலாடி பிரிந்த உயிர்.! 

பெற்றோரிடம் கூறிய மாணவியால் கைதான ஆசிரியர்: இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் தனது பெற்றோரிடம் ஆசிரியரின் செயல்பாடுகளை தெரிவிக்கவே, பதறிப்போன பெற்றோர் தங்களின் உறவினர்களுடன் சேர்ந்து பள்ளிக்கு சென்று முற்றுகை சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். Dindigul Shocker: ஆண் நண்பர்கள் முன் அக்கா - தங்கைக்கு பாலியல் தொல்லை; திண்டுக்கல்லில் இளைஞர்களை கட்டிப்போட்டு பயங்கரம்.! 

போக்ஸோவில் கைது: பின் பெற்றோரிடம் புகார் பெற்று போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஆசிரியர் சௌந்தர்ராஜனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.

(The above story first appeared on LatestLY on Apr 06, 2024 10:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).