ஏப்ரல் 06, ஜெய்பூர் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் பகுதியைச் சார்ந்த பதின்ம வயது சிறுமி, சம்பவத்தன்று கும்பல் ஒன்றால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் சிறுமியை (Rajasthan Minor Girl Gang Rape) மனதளவில் கடுமையாக பாதித்த நிலையில், அவர் தனக்கு நேர்ந்த துயரத்தை வெளியே கூற வழி இன்றி தவித்து உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்து, தற்கொலைக்கு முயன்றார்.

உண்மையை அறிந்த குடும்பத்தினர்: உயிருக்கு போராடிய சிறுமியை மீட்ட குடும்பத்தினர், உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக செய்தனர். முதலில் தற்கொலைக்கான காரணத்தை சிறுமி கூற மறுத்துவிட்ட நிலையில், பின் அதிகாரிகளின் அறிவுரைக்கு பின்னர் நடந்த துயரத்தை தெரிவித்துள்ளார். சிறுமிக்கு நடந்த அநீதியை அறிந்த அதிகாரிகள், அவரின் பெற்றோரிடம் புகாரை பெற்றுக்கொண்டனர். Dindigul Shocker: ஆண் நண்பர்கள் முன் அக்கா - தங்கைக்கு பாலியல் தொல்லை; திண்டுக்கல்லில் இளைஞர்களை கட்டிப்போட்டு பயங்கரம்.! 

சிறுமி பரிதாப பலி: இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய அதிகாரிகள், விசாரணையை தொடங்கிய மறுநாளே இரண்டு குற்றவாளிகளை கைது செய்தனர். மேலும், எஞ்சிய தலைமறைவான குற்றவாளி ஒருவரும் இரண்டு நாட்கள் தேடலுக்குப்பின் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் மார்ச் 25ஆம் தேதி நடந்தது. தற்கொலைக்கும் முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமியின் உடல்நலம் நாளுக்கு நாள் மோசமாகவே, அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிகிச்சை பலன்களில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.