Two-Wheeler Rider Dies: 21 வயது இளைஞருக்கு எமனாக மாறிய மின்கம்பம்; ரீல்ஸ் வீடியோ, அதிபயங்கர வேகத்தால் சோகம்..!

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை இணைப்புச்சாலை பகுதியில், அதிவேகத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்து ரீல்ஸ் வீடியோ தயாரித்த இளைஞர் மண்டை உடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

Two-Wheeler Rider Dies: 21 வயது இளைஞருக்கு எமனாக மாறிய மின்கம்பம்; ரீல்ஸ் வீடியோ, அதிபயங்கர வேகத்தால் சோகம்..!
Ulunthurpet Bike Accident 20-Oct-2024 (Photo Credit: Facebook / Pixabay)

அக்டோபர் 21, உளுந்தூர்பேட்டை (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை (Ulundurpet), ஊ. கீரனூர் காலனியில் வசித்து வருபவர் ரவீன் குமார் என்ற ராகுல் (வயது 21). இவர் தனது நண்பர்களுடன் இன்ஸ்டாகிராம் (21-Year-Old Youth Dies) வீடியோ பதிவிடுவது, பைக்கில் ஸ்டண்ட் செய்வது என இருந்து வந்துள்ளார்.

அதிவேகத்தில் இருசக்கர வாகனம் இயக்கம்:

இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் தனது நண்பர்களுடன் ராகுல் வீலிங் செய்து இருக்கிறார். உளுந்தூர்பேட்டை - சேலம் சாலையில், திருச்சி சாலை இணைப்பு பகுதியில் இவர் அதிவேகமாக வாகனத்தை வீலிங் செய்தவாறு இயக்கி சென்றுள்ளார். அச்சமயம், இருசக்கர வாகனம் சாலையோரமாக இருந்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

மண்டை உடைந்து படுகாயம்:

இந்த சம்பவத்தில் ராகுலின் மண்டை உடைந்து படுகாயம் ஏற்பட்டுள்ளது. இரத்த வெள்ளத்தில் சாலையில் அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். தலைக்கவசமும் அணியாமல் அதிவேகத்தில் பயணம் செய்ததால், அவரின் தலையில் படுகாயம் உண்டானது. தகவல் அறிந்து வந்த அவசர ஊர்தி பணியாளர்கள், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். Thirumangalam Shocker: பெண்ணின் ஆடை இயந்திரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலி; ஆயில் மில்லில் நடந்த சோகம்.! 

Accident File Pic (Photo Credit: @ETVBharatTN X)
Accident File Pic (Photo Credit: @ETVBharat X)

பரிதாப மரணம்:

மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில், முன்கூட்டியே இளைஞர் பலியானது தெரியவந்தது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து குறித்து தகவல் அறிந்து ராகுலன் நண்பர்கள், உறவினர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன்பு குவிந்து கதறியழுதனர்.

ரீல்ஸ் மோகம், அதிவேகம் ஆபத்தானது:

இன்றளவில் இருக்கும் இளைஞர்களுக்கு ரீல்ஸ் வீடியோ எடுப்பது, ஸ்டண்ட் செய்து தன்னை பெரிய வித்தைக்காரர் என பார்வளையர்களிடம் பெருமைப்படுத்துவது தொடர்கதையாகிறது. தனது செயல்பாடுகள் நொடியில் விபரீதத்தில் முடியலாம் என்பது தெரிந்தும், தனக்கென்ன ஆகிவிடும் என சுற்றிவந்தால், இறுதியில் இதுபோன்ற விபரீதம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

(The above story first appeared on LatestLY on Oct 21, 2024 08:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).