5-Year-Old Boy Killed: பாலியல் தொல்லைக்கு உடன்பட மறுத்த 5 வயது சிறுவன் கொலை; அரசு அதிகாரி கைது.. காஞ்சிபுரத்தில் பகீர்.!

உணவுசாப்பிடச் சென்ற இடத்தில் நல்லவன் போல பேசி பழக்கத்தை ஏற்படுத்திய சர்வேயர், இறுதியில் 5 வயது சிறுவனின் உயிருக்கு எமனாக மாறிய நிகழ்வு தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது.

5-Year-Old Boy Killed: பாலியல் தொல்லைக்கு உடன்பட மறுத்த 5 வயது சிறுவன் கொலை; அரசு அதிகாரி கைது.. காஞ்சிபுரத்தில் பகீர்.!
Victim Boy | Accuse Rajesh (Photo Credit: @NewsTamil24X7 X)

செப்டம்பர் 02, காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் (5-Year-Old Boy Killed) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில், 5 வயதுடைய சிறுவன் வசித்து வருகிறார். சிறுவனின் தாய் - தந்தை இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்ட நிலையில், தம்பதியின் குழந்தைகளான பெண், ஆண் மழலைகள் தாய் மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வசித்து வருகிறார்கள்.

நட்பாக பழகி பயங்கரம்:

5 வயதுடைய சிறுவனின் பாட்டி தள்ளுவண்டிக்கடை வைத்து நடத்தி வரும் நிலையில், அக்கடைக்கு நில அளவையர் ராஜேஷ் என்பவர் அவ்வப்போது வந்து சென்றுள்ளார். இதன்பேரில், அவர் பாட்டி மற்றும் அவரின் குடும்பத்தாரிடம், நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்து வந்துள்ளார். தினமும் டிபன் சாப்பிட வந்தபோது பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. "50 ஆண்டுகளில் சாப்பிட அரிசி கிடைக்காது" - மதுரை கிளை நீதிபதிகள் வேதனை.. சிவகங்கை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு இடைக்கால தடை.! 

சிறுவன், சிறுமி பலாத்கார முயற்சி:

சிறுவன் மற்றும் சிறுமியை அவ்வப்போது ராஜேஷ் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, பின் மீண்டும் அழைத்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அக்கா-தம்பியை வீட்டிற்கு அழைத்துச் சென்ற ராஜேஷ், இருவரிடமும் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார்.

சிறுவன் பலி:

சிறுவனின் தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். சிறுவனின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவில் சிறுவன் பாலியல் தொல்லை & தலையில் படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்தது உறுதியானது.

குற்றவாளி கைது:

இதனையடுத்து, சிறுமியின் அக்காவிடம் விசாரித்தபோது, ராஜேஷ் தாக்கியதால் தம்பி மயங்கியதாக கூறி இருக்கிறார். இதனால் ராஜேஷை கைது செய்த அதிகாரிகள் விசாரித்தபோது, சிறுவன் மற்றும் சிறுமியிடம் அத்துமீற முயற்சித்தபோது, சிறுவன் ஒத்துழைப்பு தர மறுத்ததால் ஆத்திரத்தில் அடித்ததாகவும், அதனால் சிறுவன் மயங்கிவிட்டதாகவும் கூறி இருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது. ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).