4-Year-Old Child Girl Dies: அங்கன்வாடிக்கு சென்று வந்த சிறுமி திடீர் மரணம்.. பெற்றோர், உறவினர்கள் கண்ணீர்.!
ஆசையாக அங்கன்வாடிக்கு சென்றுவந்த குழந்தை திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கால் உயிரிழந்த பரிதாபம் காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது.
நவம்பர் 23, காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உப்பேரிக்குளம் பகுதியில் வசித்து வருபவர் சங்கர். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 4 வயதுடைய குழந்தை மோனிகா இருக்கின்றனர். சிறுமி மோனிகா அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருவதாக தெரியவருகிறது.
மருத்துவர் இல்லை:
இதனிடையே, நேற்று வழக்கம்போல அங்கன்வாடி மையத்திற்கு சென்று வீடு திரும்பிய சிறுமிக்கு, தொடர்ந்து வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்றநிலையில், அங்கு மருத்துவர் இல்லை. நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அற்புத வாய்ப்பு... உடனே விண்ணப்பியுங்க.. தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு.!
மாத்திரை கொடுத்ததும் பலனில்லை:
பணியில் இருந்த செவிலியர்கள் மாத்திரைகளை வழங்கிய நிலையில், அதனை சிறுமிக்கு கொடுத்துள்ளனர். எனினும், சிறுமி தீவிர உடல்நலக்குறைவை எதிர்கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் மற்றும் உணவுப்பாதுகாப்புதுத்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
சிறுமி மரணம்:
சிறுமி சாப்பிட்ட உணவு மாதிரி, அங்கன்வாடி குடிநீர் ஆகியவற்றை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். பச்சிளம் பிஞ்சு குழந்தையை இழந்த சோகத்தில், சிறுமி மோனிகாவின் குடும்பமே கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
(The above story first appeared on LatestLY on Nov 23, 2024 10:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

