நவம்பர் 23, சென்னை (Chennai News): சென்னையில், ஜனவரி-2025 பொங்கல் பண்டிகையின் போது தமிழ்நாட்டின் நாட்டுப்புறக் கலைகள், அயல் மாநில நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் பிரம்மாண்ட சங்கமம்-நம்ம ஊரு திருவிழா சென்னையின் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையால் நேரடியாக நடத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏனைய 8 இடங்களிலும் மண்டல கலை பண்பாட்டு மையங்களின் வாயிலாக கலைவிழாக்கள் இந்நிதியாண்டிற்குள் நடத்தப்படும்.
இணையவழியில் விண்ணப்பிக்க:
"சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவினை குறுந்தகடு (CD) அல்லது பென் டிரைவ்-ல் பதிவு செய்து, அத்துடன் கலை பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தில் கோரியுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து, தொடர்புடைய கலை பண்பாட்டுத்துறையின் மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகங்களுக்கு பதிவுத் தபாலில் (Registered Post) அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். "சரியா தெரிஞ்சிக்கிட்டு சொல்லுங்க" - பாமக ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு., அமைச்சர் சக்கரபாணி பதில்.!
டிசம்பர் 10 க்குள் அனுப்ப வேண்டும்:
கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தேர்வுக்குழுவால் தகுதியான கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, 'சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் அளிக்கப்படும். கலைக்குழுக்கள் பின்வரும் விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். தங்கள் குழுவின் கலைத்திறமையை வெவளிப்படுத்தும், சமீபத்தில் எடுக்கப்பட்ட 5 நிமிட வீடியோவை குறுந்தகடு (CD) அல்லது பென் டிரைவ்-ல் பதிவு செய்து, அத்துடன் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து தொடர்புடைய கலை பண்பாட்டுத்துறையின் மண்டல உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு 10.12.2024-க்குள் பதிவஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். ஒரு குழுவில் இடம் பெற்ற கலைஞர்கள் வேறு எந்த குழுவிலும் பங்கேற்கக்கூடாது. தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.
நாட்டுப்புற கலைஞர்கள் பலன்பெறுவர்கள்:
தற்போது நடத்தப்படவுள்ள திருவிழாவின் வாயிலாக கோயம்புத்தூர், தஞ்சாவூர், வேலூர், சேலம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 8 இடங்களில் நாட்டுப்புறக் கலை விழாக்கள் நடத்தப்படும். ஒஇக்கலைவிழாவின் வாயிலாக சுமார் 4500- க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன்பெறுவர்.
மண்டல வாரியாக அலுவலர்களின் விபரங்கள் மற்றும் அலைபேசி எண்கள் கீழ்காணும் ட்விட்டின் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது:
கலை பண்பாட்டுத்துறை வழங்கும் ‘சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/IBB2qKoAEJ
— TN DIPR (@TNDIPRNEWS) November 22, 2024
கடந்த 2023ம் ஆண்டு சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் எடுக்கப்பட்ட காணொளி:
சென்னை சங்கமம் "நம்ம ஊரு திருவிழா" #பறையாட்டம் https://t.co/uWoyY4H6S4#சென்னைசங்கமம் | #DMK4TN pic.twitter.com/hJnOHf9pLG
— Pugal H (@pugal_h) January 18, 2023