School Bus Accident: போட்டாபோட்டியால் பயங்கரம்; பள்ளி பேருந்து புளியமரத்தில் மோதி 15 மாணவர்கள் படுகாயம்.!
பள்ளி மாணவர்கள் பயணிக்கும் பேருந்து ஓட்டுனர்களுக்கு இடையேயான போட்டி காரணமாக 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
செப்டம்பர் 04, போச்சம்பள்ளி (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், அங்குள்ள சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களின் வசதிக்காக பள்ளி நிர்வாகம் சார்பில் பேருந்து சேவையும் வழங்கப்படுகிறது. Lorry-Bus Accident: லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து.. 3 பேர் பலி..!
15 மாணவர்கள் படுகாயம்:
இதனிடையே, நேற்று சிறப்பு வகுப்புகளை முடித்துக்கொண்ட 15 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள், பள்ளியின் பேருந்தில் தங்களின் வீட்டுக்கு பயணம் செய்துகொண்டு இருந்தனர். அச்சமயம், இரண்டு பள்ளி பேரூந்து ஓட்டுநர்களுக்குள் போட்டாபோட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு வேகமாக வாகனத்தை இயக்கி இருக்கின்றனர்.
இந்நிலையில், தனியார் பள்ளியின் பேருந்து, சாலையோரம் உள்ள புளியமரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மாணாக்கர்கள் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விஷயம் குறித்து தகவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
(The above story first appeared on LatestLY on Sep 04, 2024 11:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

