Sirkazhi Accident: வெறும் 19 வயசு., டூவீலர் - பேருந்து மோதி 2 நண்பர்கள் உடல் நசுங்கி மரணம்..! கண்ணீர் சோகம்.!
விதிகளை மீறி சாலைகளில் பயணம் செய்த இரண்டு நண்பர்கள், விபத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சோகம் மயிலாடுதுறையில் நடந்துள்ளது.
நவம்பர் 04, சீர்காழி (Mayiladuthurai News): மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி (Sirkazhi), சிங்காரத்தோப்பு பகுதியில் வசித்து வருபவர்கள் சந்தோஷ் குமார் (வயது 19), சதீஷ் குமார் (வயது 20), மகேஷ் குமார் (வயது 19). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். இவர்கள் நேற்று தங்களின் நண்பர் ஒருவருடன் என 3 பேராக ஒரே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளனர்.
ஒரு வாகனத்தில் மூவராக பயணம்:
மூவரும் ஹோண்டா ஆக்டிவா (Two Wheeler Private Bus Accident) இருசக்கர வாகனத்தில் திருமுல்லைவாசல் சாலையில் சென்றுள்ளனர். அப்போது, விநாயக குடி, பொறைவாய்க்கால் பகுதியில், எதிர்திசையில் வந்த சிந்துஜா - கனகராஜ் என்ற தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. தனியார் பேருந்து சீர்காழியில் இருந்து பழையாறு நோக்கி பயணம் செய்தபோது, இளைஞர்களின் வாகனம் மோதி இருக்கிறது. Manali Accident: "டேய் வாடா" - ஹெல்மட்டுக்கு பயந்து லாரிக்கு அடியில் பைக்கை சொருகிய இளைஞர்; தலை நசுங்கி பரிதாப மரணம்.!
இருவர் (2 Youth Dies Accident) உடல் நசுங்கி பலி:
இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த மூவரில் சந்தோஷ் குமார், சதீஷ் குமார் ஆகிய 2 இளைஞர்கள் நிகழ்விடத்திலேயே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உடல்நசுங்கி உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் காவல்துறையினர், இளைஞர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறை விசாரணை:
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. விபத்தில் சிக்கிய வாகனத்திற்கு பெருமளவு சேதம் ஏற்படாத நிலையில், விலைமதிப்பில்லாத 2 உயிர்கள் பறிபோயுள்ளது. மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
(The above story first appeared on LatestLY on Nov 04, 2024 10:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

