Victim Vinoth & Bike Lorry Crash Death (Photo Credit: @PolimerNews X)

நவம்பர் 04, மணலி (Chennai News): சென்னையில் உள்ள மணலி (Manali Accident), புதுநகர், வெள்ளிவாயல் சாலை பகுதியில் வசித்து வருபவர்கள் கிரண், வினோத். இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். சம்பவத்தன்று சத்தியமூர்த்தி நகர் சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் திருவெற்றியூர் அதிவிரைவுச் சாலையில் வீட்டிற்கு திரும்பிவந்து கொண்டு இருந்தனர். இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் தலைக்கவசம் இன்றி பயணம் செய்துள்ளனர்.

தலைக்கவசம் (Helmet) அணியவில்லை:

இதனிடையே, சாத்தான்காடு பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய் அருகே காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்த நிலையில், தலைக்கவசம் அணியாமல் வந்த இருவரையும் நிறுத்த முற்பட்டுள்ளனர். அப்போது, காவலர்களிடம் இருந்து தப்பிக்க முற்பட்ட இளைஞர்கள், அதிவேகத்தில் எதிர்திசையில் வாகனத்தை இயக்கியுள்ளார். அச்சமயம், தண்ணீர் லாரி ஒன்று (Chennai Lorry Two Wheeler Crash) எதிர்திசையில் வந்துள்ளது. TNSTC Bus: தீபாவளி ரேஸில் சாதனை படைத்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம்; அதிகபட்ச உச்சம்..!

தலை நசுங்கி மரணம்:

இதனை சற்றும் எதிர்பாராத இளைஞர்கள், லாரியின் நடுவில் மோதியுள்ளனர். இந்த விபத்தில் தண்ணீர் லாரிக்கு அடியில் வாகனம் சிக்கிக்கொண்டாலும், அதனை ஒட்டி வந்த கிரண் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். வினோத் லாரியின் சக்கரத்தில் சிக்கி தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வினோத்தின் நண்பர்கள், உறவினர்கள் லாரிக்கு அடியில் இருந்த சடலத்தை பார்த்து, "டேய் வினோத்து வாடா, நல்லா பண்ணிட்ட பாத்தியா நீ., அவனை கூப்டுடா" என கதறியழுதனர்.

விபத்துக்கு நாங்கள் காரணமில்லை:

காவலர்கள் வாகனத்தை நிறுத்த முற்பட்டபோது, அவர்களை தவிர்க்க வாகனத்தை எதிர்திசைக்கு கொண்டு சென்று இயக்கியது விபத்திற்கு காரணம் என்பது உறுதியானது. செங்குன்றம் காவல்துறையினர் வினோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கிரண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். இதனிடையே, இருசக்கர வாகனத்தை நாங்கள் மறுக்கவில்லை. சாலையில் நாங்கள் இருந்ததைப்பார்த்து, இளைஞர்களாகவே எதிர்திசைக்கு சென்றது விபத்திற்கு காரணமாக அமைந்தது எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

விபரீதத்தை தவிருங்கள்:

தலைக்கவசம் அணியாதது, ஓட்டுநர் உரிமம் உட்பட பிற ஆவணங்கள் இல்லாதது என விதிகளை மீறி பயணம் செய்து, அதிகாரிகளை கண்டதும் அவர்களிடம் தப்பிக்க முயற்சித்து இளைஞர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விதிகளை மீறி வாகனங்களை இயக்குவதை தவிர்ப்பது நல்லது. அதேநேரத்தில், காவலர்கள் அதிவேகமாக வரும் வாகனங்களுக்கு மத்தியில் திடீரென குறுக்கே புகுந்து வாகனத்தை நிறுத்த முற்படுவதையும் தவிர்க்க வேண்டும்.