Rider Dies after Mobile Explodes: ஸ்மார்ட்போன் வெடித்ததால் சோகம்; இருசக்கர வாகன ஓட்டி துள்ளத்துடிக்க பலி.!
துணிகளை வாங்கிவிட்டு தனது வீட்டை நோக்கி பயணித்த நபரின் ஸ்மார்ட்போன் திடீரென வெடித்து சிதறிய காரணத்தால், விபத்தில் சிக்கி வாகன ஓட்டி உயிரிழந்த சோகம் பரமக்குடி அருகே நடந்துள்ளது.
ஜூலை 22, பரமக்குடி (Paramakudi News): இராமநாதபுரம் (Ramanathapuram) மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் ரஜினி (36). இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் மதுரை - பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டு இருந்தார். கமுதனகுடி பகுதியில் இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தபோது, திடீரென செல்போன் வெடித்து சிதறி இருக்கிறது. இதனால் வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விழுந்தவர், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். US President Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ.. அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்..!
செல்போன் வெடித்து விபத்தில் சிக்கி பரிதாப பலி:
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனையில் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், ரஜினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ரஜினியுடன் பயணம் செய்த ஆர். பாண்டி என்பவர், பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த ரஜினி தனியார் வங்கியில் காவலாளியாக வேலை பார்த்துவந்த நிலையில், மதுரைக்கு நண்பருடன் சென்று துணிகள் வாங்கிவிட்டு பின் மீண்டும் பரமக்குடி நோக்கி திரும்பியபோது சோகம் நடந்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 22, 2024 10:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

