Joe Biden & Kamala Harris (Photo Credit: @JoeBiden X)

ஜூலை 22, வாஷிங்க்டன் டிசி (World News): அமெரிக்காவில் வரும் நவம்பர் 2024ல் அதிபருக்கான தேர்தல் (US President Election 2024) நடைபெறுகிறது. இதற்காக தற்போதைய லாலும் கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளர் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) தீவிர களப்பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வந்தார். அமெரிக்க துணை அதிபராக பணியாற்றி வரும் கமலா ஹாரிஸ் (Kamala Harris) தொடர்ந்து துணை அதிபராக பணியாற்றி வந்தார். ஜனநாயக கட்சியை எதிர்த்து, குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அமெரிக்க அதிபர் வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார். TN Weather Update: குமரி, நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

சர்ச்சையில் சிக்கிய ஜோ பைடன்:

உலகமே உற்றுநோக்கும் முக்கிய அரசியல் தேர்தலாக கருதப்படும் அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளராக களமிறங்கிய அதிபர் ஜோ பைடன், தொடர்ந்து பல மாகாணங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். தனது எதிர் வேட்பாளரான டொனால்ட் டிரம்புடன் நேருக்கு நேர் விவாதத்திலும் கலந்துகொண்டு இருந்தார். இதனிடையே, அவ்வப்போது அதிபர் ஜோ பைடன் மர்மமான வகையில் ஒருசில முக்கிய விஷயங்களை மாற்றி பேசுவது, கவனமில்லாது செயல்படுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.

கமலா ஹாரிஸை முன்மொழிந்தார்:

இதனால் அதிபர் ஜோ பைடனின் உடல்நலம் கேள்விக்குறியாகிய நிலையில், தற்போது அதிபர் ஜோ பைடன் அமெரிக்க அதிபருக்கான வேட்பாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு தனது முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளனர், தொடர்ந்து தனது சமூக பணிகளை மேற்கொள்வேன் எனவும் கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்:

கமலா ஹாரிஸ் கடந்த அமெரிக்க பொதுத்தேர்தலில் பங்கேற்று, துணை அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவரின் தாயார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். முதல் கறுப்பின மற்றும் ஆசிய வம்சாவளியை சேர்ந்த பெண்மணி, அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வேட்பாளராக முதல் முறை களமிறங்கி இருக்கிறார். இந்த விஷயம் உலகளவில் கவனிக்கப்படுகிறது.