Theni Baby Sales Case (Photo Credit: YouTube)

செப்டம்பர் 14, வீரபாண்டி (ThenI News): தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி, உப்புக்கோட்டை, முத்தாலம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் சங்கர் (வயது 44). இவரின் மனைவி பாண்டீஸ்வரி (வயது 30). தம்பதிகள் இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இருவருக்கும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. பாண்டீஸ்வரிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவருகிறது. இதனிடையே, கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி, நிறைமாத கர்ப்பமாக இருந்த பாண்டீஸ்வரிக்கு, ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஏற்கனவே குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த சங்கரால், குடும்பத்தின் நிலை என்பது கடுமையான மோசத்தில் இருந்து வந்துள்ளது. Annapoorna Srinivasan: அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்புக்கேட்ட விவகாரம்; முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்.. பாஜக அண்ணாமலை வருத்தம்.! 

ரூ. 1 இலட்சம் பணத்திற்கு விற்பனை:

இதனிடைய, பிறந்து 52 நாட்கள் ஆகிய குழந்தையை, சங்கர் ரூ.1 இலட்சம் பணத்திற்கு விற்பனை செய்ததாக உள்ளூர் மக்களால் உறுதி செய்யப்படாத தகவல் குழந்தை நலத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மாவட்ட குழந்தைகள் அலுவலர் சந்தியா, மேற்கூறிய விஷயம் தொடர்பாக விசாரணை நடத்தினார். விசாரணையில், சங்கர் தனது குழந்தையை போடியில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் வசித்து வந்த தர்மர் என்பவரின் மகன் சிவகுமார் (வயது 42), மனைவி உமா மகேஸ்வரி (வயது 36) ஆகியோரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. ரூ.1 இலட்சம் பணத்திற்கு குழந்தை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த உண்மையை அறிந்த குழந்தைகள் நல அலுவலர், அங்குள்ள வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற காவல் துறையினர் சங்கர், சிவகுமார், உமா மகேஸ்வரி ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட குழந்தை, அரசின் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.