Breaking: கை-கால்களை உடைத்து 13 வயது சிறுமி பலாத்காரம் & கொலை; சிவகங்கையில் பேரதிர்ச்சி..!
மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதியான மனைவிக்கு பிறந்த இரட்டைக்குழந்தையில் ஒன்று இறந்துவிட்ட நிலையில், இளைஞர் எந்த விதமான வருத்தமும் இல்லாது 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் சிவகங்கையில் நடந்துள்ளது.
அக்டோபர் 26, சிவகங்கை (Sivagangai News): போக்ஸோ வழக்கில் ஏற்கனவே சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி, விடுதலையான பின்னர் பெண் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் இரட்டைக்குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே, மருத்துவமனையில் அனுமதியான மனைவியின் அதே வார்டில், பிரசவத்திற்கு அனுமதியான வேறொரு பெண்ணின் 13 வயது மகளிடம் பேசி, தன்னுடன் அழைத்துச்சென்று அத்துமீறி சிறுமியை கொலை செய்த கொடூரம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. பாலியல் குற்றவாளிகளுக்கு எளிதில் விடுதலை கிடைக்காமல், கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதை ஆழமாக உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி:
சிவகங்கை (Sivaganga 13-Year-Old Girl Rape) மாவட்டத்தில் உள்ள கல்குளம் கிராமத்தில், பாலுசாமி என்பவரின் விவசாய தோட்டக்கிணற்றில், 13 வயதுடைய ஒருவர், கடந்த அக்.24ம் தேதி அன்று சடலமாக மீட்கப்பட்டார். இந்த விஷயம் குறித்து சிவகங்கை தாலுகா காவல் துறையினர் தகவல் அறிந்து வந்த நிலையில், அவர்கள் விசாரணை நடத்தினர். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால், அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வந்தது.
காவல்துறையினர் விசாரணை:
சிறுமி யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? யாரால் கொலை செய்யப்பட்டார்? என விசாரணை தொடர்ந்தது. பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கை-கால்கள் உடைக்கப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்டுள்ளது உறுதியானது. இதனால் விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அங்குள்ள சுற்றுவட்டாரப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிரா ஆய்வு செய்யப்பட்டன. Perambalur: ரூ.345 கோடி செலவில் நிறைவேறும் கொள்ளிடம் ஆறு கூட்டுக்குடிநீர் திட்டம்; பெரம்பலூர் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.!

சிசிடிவியில் அம்பலமான உண்மை:
இந்நிலையில், சிவகங்கையில் உள்ள கல்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் சதிஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், சிறுமியை இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு, பெட்ரோல் நிரப்பியது தெரியவந்தது. இதனால் சம்பந்தப்பட்ட இளைஞர் யார்? அவர் எந்த வழியில் சென்றார்? என விசாரணை தொடர்ந்தது. அதன்பேரில் மேற்கூறிய கல்குளம் கிராமத்திற்கு அருகில் இருக்கும் பட்டாணிக்குளம் கிராமத்தில் வசித்து வரும் சதிஷ் குமாரை கைது செய்தனர்.
இரட்டைக்குழந்தை:
மதுரையில் வசித்து வரும் சதிஷ் குமாருக்கு திருமணம் முடிந்து மனைவியும் இருக்கிறார். சதீஷின் மனைவி சமீபத்தில் கர்ப்பமாக இருந்து இரட்டைக்குழந்தைகளை பிரசவித்த நிலையில், ஒருகுழந்தை உடல்நலம் குன்றி உயிரிழந்தது. மற்றொரு குழந்தை தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இதற்காக அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் மதுரையில் இருக்கின்றனர். MTC Conductor Killed: அரசுப்பேருந்து பயணத்தில் தகராறு; வாக்குவாதம் முற்றியதில் நடத்துனர் அடித்துக்கொலை.. சென்னையில் பயங்கரம்.!
சிறுமி பலாத்காரம்:
இதே மருத்துவமனையில் நத்தம், சிறுகுடி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் தாயாரும், தனது அடுத்த பிரசவத்திற்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். அப்போது, சதிஷ் குமார் 13 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இதன்பேரில் சிறுமியை கடந்த அக்.24 அன்று தன்னுடன் கிராமத்திற்கு அழைத்து வந்த சதிஷ், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின் இதுகுறித்து பெற்றோரிடம் கூறக்கூடாது என சிறுமி மிரட்டப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் உண்டாகியுள்ளது.
வாக்குவாதம்-கொலை:
இதனால் ஆத்திரமடைந்த சதிஷ் குமார் சிறுமியை கொலை செய்து, கை-கால்களை உடைத்து கிணற்றில் வீசி இருக்கிறார். இந்த சம்பவத்தில் சிறுமி உயிரிழந்துவிட, சதிஷ் குமார் எதுவும் தெரியாததுபோல் இருந்துள்ளார். தற்போது சதிஷ் குமார் நேற்று இரவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைதான சதிஷ் குமார் ஏற்கனவே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் ஆவார். இவர் 8 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில், பின் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சதிஷ் குமாருக்கு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், அவர் மனைவி கர்ப்பமாகி 2 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்ததும் திருமணம் செய்தவர், மீண்டும் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று கிணற்றில் வீசி இருக்கிறார்.
மேற்படி களநிலவரங்கள் சேகரிக்கப்படுகின்றன...
(The above story first appeared on LatestLY on Oct 26, 2024 10:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

