#Big Breaking: அதிமுக கிளை செயலாளர் வெட்டிக்கொலை; சிவகங்கையில் பயங்கரம்.. கிராம மக்கள் கொந்தளிப்பு.!
சிவகங்கை மாவட்டத்தை பதறவைக்கும் வகையில், கடந்த 4 நாட்களுக்குள் 3 கொலைகள் அடுத்தடுத்து நடந்துள்ளது. இன்று அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
நவம்பர் 04, நாட்டாகுடி (Sivagangai News): சிவகங்கை (Sivaganga Murder) மாவட்டத்தில் உள்ள நாட்டாகுடி கிராமத்தில் வசித்து வருபவர் கணேசன். இவர் அதிமுக கிளை செயலாளராக (AIADMK Supporter Kills) இருந்து வருகிறார். சொந்தமாக பெட்டிக்கடை ஒன்றும் இவர் நடத்தி வரும் நிலையில், இன்று காலை வழக்கம்போல அவர் பெட்டிக்கடையை திறக்க வந்துள்ளார். அச்சமயம், அவரை கொலை செய்ய மர்ம நபர்கள் முன்னதாகவே அங்கு இருந்துள்ளனர். Sirkazhi Accident: வெறும் 19 வயசு., டூவீலர் - பேருந்து மோதி 2 நண்பர்கள் உடல் நசுங்கி மரணம்..! கண்ணீர் சோகம்.!
சரமாரியாக வெட்டிக்கொலை:
கணேசன் பெட்டிக்கடைக்கு வந்ததும் மர்ம கும்பலால் அவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருக்கிறார். உள்ளூர் மக்களால் சாமி என அழைக்கப்படும் கணேசன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறை விசாரணை:
கணேசன் கொலை செய்யப்பட்டதை அறிந்த கிராம மக்கள், மருத்துவமனை வளாகத்தில் கூடிய காரணத்தால் அங்கு பரபரப்பு சூழல் தொற்றிக்கொண்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். மேலும், கணேசனை கொலை செய்த குற்றவாளிகளுக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். கடந்த தீபாவளியில் இருந்து 4 நாட்களுக்குள் நடந்த மூன்றாவது கொலை சம்பவமாக அம்மாவட்டத்தில் நடந்துள்ளது.
(The above story first appeared on LatestLY on Nov 04, 2024 10:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

