Electrocution Death: மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி., மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் துயரம்.!
நண்பர்களுடன் மகிழ்ச்சியாக சிறுவன் பட்டாசு வெடித்துக்கொண்டு இருந்தபோது, மின்கம்பி திடீரென அறுந்து சிறுவன் மீது விழுந்ததால் மரணம் ஏற்பட்ட சோகம் நடந்துள்ளது.
நவம்பர் 02, இளையான்குடி (Sivaganga News): சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி, பெரும்பச்சேரி கிராமத்தில் வசித்து வருபவர் கார்த்திக் (வயது 14). சிறுவன் தீபாவளியன்று தனது நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள அங்கன்வாடி மையம் அருகே இருக்கும் இடத்தில் பட்டசு வெடித்துக்கொண்டு இருந்தார்.
மின்கம்பி (Electrocution Death) அறுந்து விழுந்தது:
அச்சமயம், அங்கிருந்த மின்கம்பி ஒன்று திடீரென அறுந்து சிறுவனின் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் சிறுவன் கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிறுவனை கண்டு நண்பர்கள் அலறவே, உடனடியாக அக்கம் பக்கத்தினர் வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பாவா., இது டம்மி பாவா.. காதலனை கரம்பிடிக்க போலீஸ் உடுப்பு.. ஓசி பேஷியலால் அம்பலமான உண்மை.!

சிறுவனின் மரணம் உறுதி:
அங்கு சிறுவனை பரிசோதனை செய்ததில், கார்த்திக்கின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இதனால் சிறுவனின் உறவினர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகினர். அனைவரும் கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை:
இந்த விஷயம் குறித்து பெரும்பச்சேரி பொதுமக்கள் மின்கம்பம் சேதமாகி இருப்பது குறித்தும், உயர் மின்னழுத்த கம்பிகளின் தரம் குறித்தும் மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. இதனாலேயே சிறுவனின் உயிர் பறிபோயுள்ளது என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
(The above story first appeared on LatestLY on Nov 02, 2024 10:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

