நவம்பர் 02, நாகர்கோவில் (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடசேரி பகுதியில் தனியார் பெண்கள் அழகுநிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அழகு நிலையத்தை நடத்தி வரும் பெண், அங்குள்ள வடசேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை சம்பவத்தன்று வழங்கி இருந்தார். அந்த புகாரில், வடசேரி காவல் நிலையத்தில், காவல் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருவதாக கூறிய பெண் ஒருவர், காவல் நிலையத்தின் பெயரைச்சொல்லி தன்னிடம் 2 முறை இலவசமாக பேஷியல் உட்பட முக அழகு மேம்படுத்தும் பேஷியல் செய்துவிட்டு சென்றார். அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் காவல் உதவி ஆய்வாளர் தானா? என சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார். 3-Year-Old Girl Rape & Murder: சாக்லேட் தருவதாக 3 வயது சிறுமி பலாத்காரம், கொலை.. 22 வயது உறவுக்கார இளைஞர் அதிர்ச்சி செயல்.!
போலி பெண் அதிகாரி:
இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர், பெண் வழங்கிய தகவலின் பேரில் அபி பிரபா என்ற பெண்ணை கைது செய்தனர். இவரிடம் நடந்த விசாரணையில், காவலரின் சீருடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்டது. மேலும், நபர் ஒருவருக்கு காவல் அதிகாரியின் சீருடையில் அபி பிரபா ஆலோசனை வழங்குவது போன்ற காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. இதனையடுத்து, பெண்ணிடம் நடந்த விசாரணையில், காதலனுக்காக காவலர் வேஷம் போட்டது அம்பலமானது. மேலும், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கையெழுத்திட்ட காவலருக்கான அடையாள அட்டையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
திருமணத்திற்காக வேஷம்:
அபி பிரபாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து கணவர், மகன் இருந்தனர். கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது மகனுடன் வசித்து வரும் அபி பிரபாவுக்கு, இரயில் பயணத்தின்போது அங்குள்ள பள்ளிவிளை பகுதியில் வசித்து வரும் இளைஞர் சிவா என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. அந்த இளைஞரின் பெற்றோரோ, நீ கட்டினால் காவல் அதிகாரியாக இருக்கும் பெண்ணையே கரம்பிடிக்க வேண்டும் என கண்டிப்புடன் இருந்துள்ளனர். இதனை காதலர், தனது காதலியான அபி பிரபாவிடம் தெரிவித்து இருக்கிறார்.
இதனால் காதல் ஜோடி இளைஞரின் குடும்பத்தை நம்பவைக்க, அபி பிரபா காவலர் போல வேடம் ஏற்றுள்ளார். ஆனால், அதே வேடத்தில் ஓசியில் பேசியல் செய்து அவர் சிக்கிக்கொண்டுள்ளார். அபிக்கு உதவி செய்ததாக, அவரின் நண்பர் பிருதிவிராஜ் என்பவரையும் அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து இருக்கின்றனர்.