Chennai Shocker: கோபம் வருவது போல் எரிச்சல் கலாய்; வம்பிழுத்தவரின் வாயிலேயே வெட்டிக்கொன்ற இளைஞர்கள்.. சென்னையில் பரபரப்பு.!

22 வயது கல்லூரி மாணவர் மற்றும் இன்ஸ்டாகிராம் புகழ் நபர், கலாய்த்ததில் ஏற்பட்ட பிரச்சனையில் 3 பேர் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தன்னை எதிர்க்க எவனிருக்கிறான்? என்ற எண்ணத்தில் வலம்வந்த நபர், வாயிலேயே வெட்டுப்பட்டு பலியானது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Chennai Shocker: கோபம் வருவது போல் எரிச்சல் கலாய்; வம்பிழுத்தவரின் வாயிலேயே வெட்டிக்கொன்ற இளைஞர்கள்.. சென்னையில் பரபரப்பு.!
Victim Udhayakumar | Accuse Naresh & Team (Photo Credit: Facebook)

மே 14, தாம்பரம் (Tambaram Crime News): சென்னையில் உள்ள தாம்பரம், சிட்லபாக்கம் (Chitlapakkam Crime), திருவள்ளூர் நகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 22). இவர் தாம்பரத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் எம்பிஏ பட்டம் பயின்று வருகிறார். குடும்பத்திற்காக ஆட்டோவும் ஒட்டி வந்துள்ளார். இன்ஸ்டாகிராம் (Instagram Reels) செயலியை பயன்படுத்தி வந்த உதயகுமார், அவ்வப்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ பதிவிடுவது வழக்கம்.

இயல்பான குணம் எமனாக மாறியது? ரௌடிகளின் கானா பாடலுக்கு ஏற்ப தனது உடல்மொழியை வெளிப்படுத்தி, பிறரை கலாய்ப்பது, மிரட்டுவது போன்ற வீடியோ வெளியிட்டு வந்த உதயகுமார், தனது தெருவுக்கு வந்து செல்லும் வெளிப்பகுதி ஆட்களையும் கலாய்த்து மிரட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இது அவரின் இயல்பான குணம் எனவும் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் கூறப்படுகிறது. இதனிடையே, சம்பவத்தன்று உதயகுமாரின் வீட்டிற்கு எலக்ட்ரீசியன் ஒருவர் வருகை தந்துள்ளார். Landslide On Mountain Road: மலைச்சாலையில் மண் சரிவு.. கொடைக்கானல் செல்வோர்க்கான அறிவிப்பு..!

இன்ஸ்டா ரீலுக்காக சேட்டை: உதயகுமார் எலக்ட்ரீஷியனிடம் விசாரித்தபோது, அவர் சேலையூர் பகுதியை சேர்ந்த நரேஷ் (வயது 24) என்பது தெரியவந்தது. இதனால் சேலையூரை சேர்ந்த நரேஷை மிரட்டி கலாய்த்த உதயகுமார், மீண்டும் இங்கு வரக்கூடாது என சொல்லி அனுப்பி வைத்துள்ளார். பின் வேலை விஷயமாக மீண்டும் நரேஷ் திருவள்ளூர் நகருக்கு வந்ததால், அவரை இடைமறித்த உதயகுமார் மற்றும் அவரின் நண்பர்கள், இம்முறை நரேஷை தாக்கி அனுப்பி வைத்துள்ளனர்.

கலாய்த்த தகராறில் ஆவேசம்: இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற நரேஷ், கலாய்க்கிறேன் என்ற பெயரில் வம்பிழுக்கும் உதயகுமாருக்கு பாடம் புகட்ட எண்ணி இருக்கிறார். இதற்காக தனது நண்பர்களான கல்லூரி மாணவர்கள் கிருஷ்ணன் மற்றும் சாந்தகுமார் ஆகியோருடன் புறப்பட்டு சிட்லபாக்கம் வந்தவர் உதயகுமாரை தேடி இருக்கிறார். அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே, எதற்ச்சையாக உதயகுமார் தனது காதலியிடம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நின்று பேசும்போது சிக்கி இருக்கிறார்.

காதலி முன் வாயிலேயே வெட்டிய கும்பல்: இதனையடுத்து, உதயகுமாரின் காதலி கண்முன்னே நரேஷ் மற்றும் அவரின் கும்பல் உதயகுமாரை சரமாரியாக வெட்டியுள்ளது. இந்த வாய்தானே கலாய்க்கிறது என வாய், தலையில் பலத்த வெட்டுக்கள் விழுந்துள்ளது. இதனைக்கண்டு பதறிப்போன காதலி அலறியபடி ஓட்டம் எடுத்துள்ளார். பின் அங்கு மக்கள் கூட்டம் கூடியிருக்கிறது. உடனடியாக அங்கிருந்து தப்பிய நரேஷ் மற்றும் அவரின் நண்பர்கள் சேலையூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். Judy Devlin Hashman Dies at 88: இங்கிலாந்து பேட்மிண்டன் வீராங்கனை ஜூடி டெவ்லின் ஹாஷ்மேன் மரணம்.. ரசிகர்கள் இரங்கல்..!

சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் பலி: படுகாயத்துடன் உயிருக்கு போராடிய உதயகுமாரை மீட்ட பொதுமக்கள், குரோம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த உதயகுமார் உயிரிழக்கவே, கொலை வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் குற்றவாளிகளை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, மேற்கூறிய தகவல் தெரியவந்துள்ளது.

மமதையால் பறிபோன உயிர்: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை பெரிய ரௌடி போல பாவித்து வீடியோ வெளியிட்டு வந்த இளைஞர், தன்னை யார்? என்ன செய்திடுவார்? என்ற மமதையில் சுற்றிவந்த நிலையில், அவரின் வாயினால் வளர்த்த வம்பு உயிர்பறிக்க காரணமாக அமைந்துள்ளதை எண்ணி பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீரில் கதறியது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement