Surandai School Girl Death Case (Photo Credit: @ThanthiTV X)

ஏப்ரல் 06, சுரண்டை (Tenkasi News): தென்காசி மாவட்டத்தில் உள்ள சுரண்டை (Surandai School Girl Death), இரட்டைக்குளம் வடக்குத்தெருவில் வசித்து வருபவர் பிரகாஷ் (வயது 40). இவர் கேரளாவில் சொந்தமாக சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். பிரகாஷின் மனைவி மீனா (வயது 35). தம்பதிகளுக்கு மானஷா என்ற 14 வயதுடைய மகள் இருக்கிறார். இவர் சுரண்டையில் உள்ள சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். மாணவிக்கு அவ்வப்போது தொடர்ந்து உடனலக்குறைவு ஏற்படுவது இயல்பு என கூறப்படுகிறது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இதனிடையே, நேற்று முன்தினம் காலை நேரத்தில், தனது மிதிவண்டியில் மாணவி வழக்கம்போல பள்ளிக்குச் சென்றார். வகுப்பறையில் மாணவிகளுடன் பேசிக்கொண்டு இருந்த மாணவி, திடீரென மயங்கினார். Heart Attack: 21 வயது மாணவருக்கு நண்பர்கள் கண்முன் நடந்த சோகம்; நொடியில் பிரிந்த உயிர்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.! 

மருத்துவமனை செல்லும் வழியிலேயே பிரிந்த உயிர்:

இதனால் பதறிப்போன மாணவிகள் ஆசிரியர்களிடம் கூறவே, உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு, சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த சுரண்டை காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் உண்டாக்கி இருக்கிறது.