Heart Attack Death in Hyderabad (Photo Credit: @jsuryareddy X)

ஏப்ரல் 05, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், மேட்ச்சல் பகுதியில் சிஎம்ஆர் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பி.டெக் துறையில் இறுதி ஆண்டு பயின்று வரும் மாணவர் வினய் குமார் (வயது 21). நேற்று கல்லூரியில் நிர்வாகம் சார்பில் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்து வந்த நிலையில், மாணவர் வினய் குமாரும் கிரிக்கெட் விளையாடினார். அவர் பீல்டிங் செய்துகொண்டு இருந்தார். அச்சமயம், திடீரென மயங்கி சரிந்தவர் மூர்ச்சையானார். NTK Seeman: வக்பு வாரிய விஷயத்தில் நடப்பது என்ன? - நாதக சீமான் ஆவேச பேட்டி.! 

சிசிடிவி காட்சிகள் வைரல்:

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அப்போது, அவர் மரணம் உறுதி செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 21 வயதாகும் இளைஞர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்தது கல்லூரி மாணவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்குள்ள கன்னம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட வினய் குமார், கல்லூரி வளாகத்தில் உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்த சிசிடிவி கேமிரா காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இளைஞர் மயங்கி விழுந்து மரணிக்கும் அதிர்ச்சி காட்சிகள்: