Suriyanarkoil Adheenam: 54 வயதில் 47 வயது பக்தையை கரம்பிடித்த கும்பகோணம் சூரியனார் கோவில் ஆதீன மடாதிபதி.!
பெங்களூரைச் சேர்ந்த பெண் பக்தையுடன் காதல் வயப்பட்ட மடாதிபதி, இறுதியில் கடந்த மாதம் அவரை ரகசிய திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த விவகாரம் ஆதாரப்பூர்வமாக அம்பலமாகி இருக்கிறது.
நவம்பர் 07, கும்பகோணம் (Thanjavur News): தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில், (Kumbakonam) சூரியனார் கோவில் ஆதீனம் (Suryanar Temple) செயல்பட்டு வருகிறது. இந்த ஆதீனத்தின் 28வது மடாதிபதியாக மகாலிங்க சுவாமி (வயது 54) இருந்த வருகிறார். இவரின் பக்தர்கள் பலரும், முக்கிய நாட்களில் நேரில் வந்து மகாலிங்க சுவாமியிடம் ஆசி வாங்கிச் செல்வார்கள். அந்த வகையில், 47 வயதுடைய ஹேமா ஸ்ரீ என்ற பெங்களூரைச் சேர்ந்த பெண் பக்தை, அவ்வப்போது மடாதிபதியை வந்து சந்தித்துசெல்வது நடந்துள்ளது. Big News: தமிழகமே அதிர்ச்சி.. 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற 14 வயது சிறுவன்..!
பதிவுத்திருமணம் அம்பலம்:
இதனிடையே, இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மலரவே, இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, கடந்த அக்.10 அன்று பெங்களூரில் பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த விவகாரத்தை இருவரும் ரகசியமாக வைத்திருந்த நிலையில், அரசல்-புரசலாக விஷயம் வெளியே தெரியவந்துள்ளது. இந்நிலையில், மடாதிபதி மகாலிங்க சுவாமி, தனது சமூக வலைதளப்பக்கத்தில் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார். இந்த விஷயம் அவரின் பக்தர்களால் வரவேற்கப்பட்டாலும், பொதுவெளியில் பேசுபொருளாகி இருக்கிறது.

மடாதிபதி விளக்கம்:
இந்நிலையில், மடாதிபதி தனது திருமணம் குறித்து சமூக வலைத்தளம் வாயிலாக வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பில், "மடாதிபதிகளாக திருமணமானவர்களும் இருந்துள்ளார்கள். நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. ஹேமா ஸ்ரீ மடத்துக்கு பக்தையாக வந்தவர், இனியும் அவர் பக்தையாக தொடர்வார். அவரையே நான் மனம் முடித்து இருக்கிறேன்" என்று கூறியுள்ளார். இயல்பாகவே மடாதிபதிகள் இல்லற வாழ்க்கையில் இருந்து விலகி இருப்பார்கள், எனினும் ஒரு சிலர் திருமணம் ஆகி மனைவியை பிரிந்து பின் துறவி ஆவார்கள். தற்போது மடாதிபதி பெண் பக்தியை திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
ஆதீனத்தின் திருமண சான்றிதழை வெளியிட்டுள்ள பதிவு:
உடனடியாக சூரியனார் கோவில் ஆதீனம் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்
சமயத்தை வளர்ப்பதை விட்டு மற்ற எல்லா கருமத்தையும் செய்கின்றனர் pic.twitter.com/gBcgU3kUEt
— சரவணன் (@caravan71485102) November 6, 2024
(The above story first appeared on LatestLY on Nov 07, 2024 10:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

