நவம்பர் 07, தேனி (Theni News): தேனி மாவட்டத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து, தனது மனைவி, இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியின் இரண்டாவது மகளுக்கு, ஆறு வயது ஆகிறது. சிறுமி அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
சாக்லேட் தருவதாக அழைத்துச் சென்று கொடுமை:
இவர்களின் வீட்டருகே 14 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், அவ்வப்போது சிறுமியுடன் விளையாடுவதாக தெரியவருகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று சிறுமிக்கு 14 வயது சிறுவன் மிட்டாய் வாங்கி தருவதாகக்கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பாலியல் தொல்லை:
அங்கு சிறுமிக்கு, சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் நிலையில், சிறுமி வலி தாங்க இயலாமல் சத்தமிட்டுள்ளார். இதனால் பதறிப்போன சிறுவன், இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என சிறுமியை மிரட்டி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். Tirunelveli Shocker: விடுதியில் தங்க பணம் இல்லை என கூறிய தந்தை; நீட் தேர்வுக்கு தயாராகிய மாணவி சேலையில் தூக்கிட்டு தற்கொலை.!
புரிந்துகொண்ட பெற்றோர்கள்:
பின் வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது 16 வயது சிறுவன் செய்த கொடுமையை விவரித்துள்ளார். இதனால் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதை பெற்றோர் புரிந்துகொண்டுள்ளனர்.
காவல்நிலையத்தில் புகார்:
இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் தாய் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்று போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த அதிகாரிகள், 14 வயது சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு, போதைப்பழக்கம் போன்றவை இன்றளவில் சிறார்களிடையே மிகக்கேடான எண்ணங்களை பதிவு செய்து, அவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது இவ்வாறான துயரங்களின் வாயிலாக அம்பலமாகி இருக்கிறது.