Child Dies In Wall Collapse: சுவர் இடிந்து விழுந்து குழந்தை பலி... கனமழையால் நேர்ந்த சோகம்..!

திருவாரூர் அதம்பார் ஊராட்சி ஒத்த வீடு பகுதியில், மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், தூங்கிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி உயிரிழந்தார்

Child Dies In Wall Collapse: சுவர் இடிந்து விழுந்து குழந்தை பலி... கனமழையால் நேர்ந்த சோகம்..!
3 children died file pic (Photo Credit: Pixabay)

ஜனவரி 08, திருவாரூர் (Thiruvarur): திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர், நன்னிலம், குடவாசல், வலங்கைமான், மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Bangladesh election 2024: வங்கதேச தேர்தல் 2024... வாக்கு எண்ணிகையில் யார் முன்னிலை?.!

சுவர் இடிந்து விழுந்து குழந்தை பலி: இந்நிலையில் நன்னிலம் அருகே அதம்பார் ஊராட்சி ஒத்தவீடு கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்துள்ளது (Wall Collapse). இவர் மின்சார வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த இடிபாட்டில் அவரது மகள் மோனிஷா (வயது 9) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அவரது மகன் மோகன்தாஸ் (வயது 12) காயம் அடைந்துள்ளார். இவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிறுவன் மோகன்தாஸ் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் சிறுமி பலியாகிவிட்டார். சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Jan 08, 2024 11:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).