Bangladesh PM Sheikh Hasina (Photo Credit: @Bbarua76 X)

ஜனவரி 08, டாக்கா (Dhaka): வங்க தேசத்தில் நேற்று 12வது பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தொடர்ந்து 5வது முறையாக பிரதமர் ஷேக் ஹசீனா (Bangladesh PM Sheikh Hasina ) வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது. அதில் ஆளும் அவாமி லீக் கட்சியின் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா: இந்த தேர்தலில் பிரதமரும் அவாமி லீக் தலைவருமான ஷேக் ஹசீனா, கோபால்கஞ்ச்-3 தொகுதியில் போட்டியிட்ட நிலையில் வெற்றி பெற்றார். ஹசீனா பெற்ற வாக்குகள் 2 லட்சத்து 49 ஆயிரத்து 965 ஆகும். அவரை எதிர்த்து போட்டியிட்டவர் வங்காளதேச சுப்ரீம் கட்சி வேட்பாளர் நிஷாம் உதின் லஷ்கர். இவர் வெறும் 469 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். Global Investors Meet 2024: "அழகான தயாரிப்புகளை வழங்கும் மாநிலம் தமிழ்நாடு" - உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், மத்திய அமைச்சர் பேச்சு.!

ஷேக் ஹசீனா இந்த தொகுதியில் இருந்து 8 ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின்படி பெரும்பாலான இடங்களில் ஆளும் அவாமி லீக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் இருகின்றனர். இதனால் மீண்டும் ஷேக் ஹசீனா பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் முழுமையான முடிவுகள் இன்று வெளியாகும் என வங்கதேச தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.