Couple Dies by Suicide: காதல் திருமணம் முடிந்த 2 மாதத்தில் தம்பதிகள் தற்கொலை.. திருவாரூரில் கண்ணீர் சோகம்.!

ஆசை ஆசையாக காதலித்து கரம்பிடித்த ஜோடிகள், கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட சோகம் திருத்துறைபூண்டியை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Couple Dies by Suicide: காதல் திருமணம் முடிந்த 2 மாதத்தில் தம்பதிகள் தற்கொலை.. திருவாரூரில் கண்ணீர் சோகம்.!
Couple Hema & Prakash (Photo Credit: @NewsTamil24X7 X)

நவம்பர் 25, திருத்துறைப்பூண்டி (Tiruvarur News): திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, ஆட்டூர், தோப்புத்தெருவில் வசித்து வருபவர் சமரச பாண்டி. இவரின் மகன் பிரகாஷ் (வயது 23). இவர் பெண்கள் குழுக்கள் வாயிலாக வழங்கப்படும் கடன் நிறுவனத்தில், நிதி வசூல் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி, நீடூர் கிராமத்தில் வசித்து வருபவர் முருகானந்தம். இவரின் மகள் ஹேமா (வயது 21).

கருத்து வேறுபாடு?

இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது நட்பில் தொடங்கி காதலாக மாறிய நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக காதல் திருமணம் செய்தனர். திருமணத்திற்கு பின்னர் தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், அவ்வப்போது சில கருத்து வேறுபாடு நிலவியதாக தெரியவருகிறது. இதனிடையே, நேற்று அதிகாலை நேரத்தில் பிரகாஷ் திடுக்கிட்டு கண்விழித்து பார்த்துள்ளார். 3-Year-Old Baby Dies: டீயுடன் பிஸ்கட் ஊட்டியபோது துயரம்.. 3 வயது குழந்தை பரிதாப பலி.! 

அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை:

அப்போது, அவரின் மனைவி ஹேமா, தூக்கில் சடலமாக தொங்கி இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன பிரகாஷ் கூச்சலிடவே, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஹேமாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, வீட்டில் கண்கலங்கி இருந்த பிரகாஷ், கயிறை எடுத்துச் சென்று புளியமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

2 மாதத்தில் சோகம்:

இந்த விஷயம் தொடர்பாக ஊர்மக்கள் திருத்துறைப்பூண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் நடந்து முடிந்த 2 மாதத்தில், புதுமண தம்பதிகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்து இருதரப்பு குடும்பத்தாரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Nov 25, 2024 10:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).