3-Year-Old Baby Dies: டீயுடன் பிஸ்கட் ஊட்டியபோது துயரம்.. 3 வயது குழந்தை பரிதாப பலி.!
குழந்தைக்கு சாப்பிட டீ-பிஸ்கட் கொடுத்த நிலையில், திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட சோகம் நடந்துள்ளது.
நவம்பர் 25, கவரைப்பேட்டை (Tiruvallur News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி (Gummidipoondi), கவரப்பேட்டை, குருவராஜா கண்டிகை கிராமத்தில் வசித்து வரும் நபர் ஹரிகிருஷ்ணன் (வயது 33). இவரின் மனைவி அமுலு (வயது 27). தம்பதிகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இருவருக்கும் 3 வயதுடைய வெங்கடலட்சுமி என்ற பெண் குழந்தை இருக்கிறது. Rowdy Killed: "கத்தியை எடுத்தவன் கத்தியால் அழிவான்" - எதிராளிகளை போட்டுத்தள்ளச்சென்ற ரௌடி கொடூர கொலை..!
பிஸ்கட் ஊட்டியபோது மூச்சுத்திணறல்:
இதனிடையே, நேற்று காலை நேரத்தில் சிறுமிக்கு தாய் டீயுடன் பிஸ்கட் ஊட்டியதாக தெரியவருகிறது. அச்சமயம், குழந்தைக்கு திடீரென புரையேறி மூச்சுத்திணறி இருக்கிறது. இதனால் அதிர்ந்துபோன பெற்றோர், உடனடியாக சிறுமியை மீட்டு செங்குன்றம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டதை உறுதி செய்தனர். Man Dies by Suicide: மகன் உயிரிழந்த அதே இடத்தில் சடலமாக தந்தை - விரக்தியில் வீபரீத முடிவு.!
குழந்தை பரிதாப பலி:
குழந்தை மரணித்த செய்தியை அறிந்த குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும், தகவல் அறிந்து வந்த கவரப்பேட்டை காவல்துறையினர், குழந்தை வேங்கடலட்சுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவிலேயே குழந்தையின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Nov 25, 2024 08:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

