Thoothukudi Shocker: கோழி மேய்ந்த தகராறால் வந்த வினை; பயங்கர சண்டையில் முதியவர் வெட்டிக்கொலை.!

பக்கத்து வீட்டில் இருப்பவரின் நிலத்தில் கோழி மேய்ந்தால் நடந்த கொலை சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Thoothukudi Shocker: கோழி மேய்ந்த தகராறால் வந்த வினை; பயங்கர சண்டையில் முதியவர் வெட்டிக்கொலை.!
Accuse Mari Selvam | Victim Sampath Visual (Photo Credit: @Sriramrpckanna1 X)

ஜனவரி 24, சாயர்புரம் (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயர்புரம், சேர்வைக்காரன்மடம் கிராமம், கீழத்தெருவில் வசித்து வருபவர் தங்கமணி. இவரின் மகன் சம்பத் செல்வகுமார் (வயது 60). இவர் விவசாயியாக பணியாற்றி வருகிறார். இப்பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரின் மகன் ஜெயபாண்டி (வயது 60). ஜெயபாண்டி வீட்டில் கோழிகளை வளர்த்து வந்துள்ளார். கோழிகள் அவ்வப்போது சம்பத்துக்கு சொந்தமான நிலத்தில் மேயும் என கூறப்படுகிறது.

இருதரப்பு மோதல் கொலை: இதில் விருப்பம் இல்லாத சம்பத், கோழிகள் தனது நிலத்திற்கு வரும்போது அதனை துரத்தி விட்டு இருக்கிறார். இதுதொடர்பாக இருதரப்பு இடையே தகராறு நிலவி வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று மீண்டும் கோழிகள் மேய்ந்தது தொடர்பாக இருதரப்பு மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சம்பத் குமார், தான் கையில் வைத்திருந்த கத்தியால் ஜெயபாண்டியை வெட்டி இருக்கிறார். இதனால் ஜெயபாண்டடியின் கழுத்தில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. Husband Kills Wife: கூலிப்படை ஏவி மனைவி கும்பலால் கற்பழித்து கொலை; நடத்தை சந்தேகத்தால் கணவன் அதிர்ச்சி செயல்.! 

காவல்துறையினர் விசாரணை: இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயபாண்டியின் மகன் மாரிச்செல்வம் (வயது 36), சம்பத்தை அரிவாளால் வெட்டி இருக்கிறார். இந்த சம்பவத்தில் சம்பத் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின் இதுகுறித்து சாயர்புரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சம்பத் செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, மாரிச்செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். சம்பத்தின் தாக்குதலில் காயமடைந்த ஜெயபாண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

(The above story first appeared on LatestLY on Jan 24, 2024 09:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).