Fatehpur WIfe Murder Case (Photo Credit: @SachinGuptaUP X)

ஜனவரி 24, படேக்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள படேக்பூரில் (Fatehpur) 26 வயதுடைய பெண்மணியின் அரை நிர்வாண சடலம், கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தின் கழிவுநீர் தொட்டியில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக மீட்கப்பட்டது. பெண்மணி யார்? அவரை கொலை செய்து சடலமாக விட்டுச் சென்றது யார்? என்பது குறித்து படேக்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், விசாரணையில் பெண்ணின் கணவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருவதும், அவர் தனது மனைவியின் மீதுள்ள சந்தேகத்தால் அவரை கொலை செய்ய கூலிப்படை கும்பலுக்கு ரூபாய் 3 லட்சம் பணம் கொடுத்து ஏற்பாடு செய்திருந்ததும் உறுதியானது. அந்த கும்பல் பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்து பின் கொலையை அரங்கேற்றி சடலமாக விட்டுச் சென்றது தெரியவந்துள்ளது.

கொலைக்குற்றவாளியின் நாசகார புத்தியால் நடந்த சோகம்: இந்த கொலையை பெண்மணியின் மைத்துனர் மற்றும் அவரது கூட்டாளிகளான கூலிப்படை கும்பலும் சேர்ந்து அரங்கேற்றியுள்ளது. முக்கிய குற்றவாளியான பெண்ணின் கணவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக தனது பெற்றோரை கொலை செய்த வழக்கிலும் சிக்கி இருக்கிறார். பிணையில் வெளிவந்த அவர் தற்போது சவுதி அரேபியாவில் இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் 26 வயதுடைய பெண்மணியை திருமணம் செய்த நிலையில், திருமணத்திற்கு பின் அவர் சவுதி அரேபியா சென்றுள்ளார். Jayam Ravi’s Siren: ஜெயம் ரவியின் அதிரடி நடிப்பில் வெளியாக உள்ள புதிய படம்… கம்பேக் கொடுப்பாரா?.! 

பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்: இதனிடையே, தனது வீட்டில் வசித்து வந்த மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அவர், தன் தம்பியை வைத்து மனைவியை கொலை செய்துள்ளார். தனது அண்ணனின் உத்தரவுப்படி, சம்பவத்தன்று தனது அண்ணியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற கொடூரன், கூலிப்படை கும்பலிடம் ஒப்படைத்து, பின் அவர்களால் பலாத்காரம் & கொலை அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. இதற்கு முதல் கட்டமாக ரூபாய் ஒரு இலட்சம் முன் தொகையாகவும், பின் காரியம் நடந்த பின்னர் பாக்கி இரண்டு இலட்சமும் என மூன்று இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கொலை குற்றத்தில் ஈடுபட்டதாக முக்கிய குற்றவாளியின் சகோதரர் உட்பட கூலிப்படையைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டில் இருக்கும் நபரை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இக்குற்றத்தில் ஈடுபட்ட ரோஹித் லோதி, ராம்சந்திரா, பஞ்சம் சிவம், சோனு லோதி ஆகியோர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.