Youth Stabs Doctor Balaji on 13 Nov 2024 (Photo Credit: @mahajournalist / @thisisRaj_ X)

நவம்பர் 13, கிண்டி (Chennai News): சென்னையில் உள்ள தாம்பரம், புதிய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா. இவர் நுரையீரல் சார்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு (Guindy Kalaignar Centenary Super Specialty Hospital) அரசு உயர்சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். இவருடன் பிரேமாவின் மகன் விக்னேஷ், உறவினர்கள் சிலர் உடன் இருந்தனர். பிரேமாவுக்கு புற்றுநோய்த்துறை மருத்துவர் பாலாஜி சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

மருத்துவருக்கு கத்திக்குத்து (Doctor Stabs):

இதனிடையே, இன்று காலை 10:30 மணியளவில், புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர் பாலாஜி நோயாளிகளை கவனித்துக்கொண்டு இருந்தார். அச்சமயம், அங்கு புறநோயாளிகள் சீட்டுடன் காத்திருந்த நபர் ஒருவர், மருத்துவர் பாலாஜியை கத்தியால் சரமாரியாக கழுத்து, முகம், வயிறு பகுதிகளில் குத்திவிட்டு தப்பி ஓடினார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன மருத்துவ பணியாளர்கள், விரைந்து இளைஞரை விரட்டிப்பிடித்தனர். அங்கேயே அவருக்கு தர்ம அடி விழுந்தது. Kotagiri Govt Hospital: திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம்; அரசு மருத்துவமனையில் டார்ச் வெளிச்சத்தில் சிறுமிக்கு சிகிச்சை..! 

மருத்துவர் கவலைக்கிடம்?

மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்டதில், அவரின் உடலில் இருந்து இரத்தம் அங்குள்ள அறைகளில் வெளியேறி சிதறிக் கிடந்தது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். உடலில் இருந்து அதிக இரத்தம் வெளியேறியதால், அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

கொலை செய்ய சதித்திட்டம்:

தகவல் அறிந்து வந்த கிண்டி காவல்துறையினர், இளைஞர் தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, மேற்கூறிய தகவலில் இடம்பெற்ற பிரேமாவின் மகன் விக்னேஷ் மருத்துவரை திட்டமிட்டு கொலை செய்ய முயற்சித்தது அம்பலமானது. மருத்துவர் பாலாஜி தனது தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்காமல், தன்னை அலைக்கழிக்க வைத்ததாகவும் குற்றம்சாட்டி, அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மருத்துவரை குத்தியதாகவும் விளக்கம் அளித்தார்.

அரசியல் தலைவர்கள் கண்டனம்:

இந்த விவகாரத்தில் விக்னேஷ் உட்பட இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருடன் இருந்த இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை வளாகத்திலேயே மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் (PMK Dr Anbumani Ramadoss), தனது எக்ஸ் (ட்விட்டர்) வலைதளப்பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் (MK Stalin), பாஜக மூத்த தலைவர் மருத்துவர் தமிழிசை சௌந்தர்ராஜன் (Tamilisai Soundararajan) ஆகியோரும் தங்களின் கண்டனத்தை அடுத்தடுத்து பதிவு செய்தனர். TN School Education Department: பள்ளிகளில் அரங்கேறும் பாலியல் சீண்டல்கள்; எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.! 

போராட்டம் அறிவிப்பு:

இந்நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில், நாளை முதல் மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் நாளை முதல் உயிர் காக்கும் அவசர சிகிச்சை தவிர, பிற அனைத்து சிகிச்சையும் நடைபெறாது. அந்தந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்டியில் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வு தொடர்பாக தகவல் அறிந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin), சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் (Ma. Subramanian) ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் விரைந்து, மருத்துவர் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.

மருத்துவரை தாக்குதல் நடத்திவிட்டு வீசப்பட்ட கத்தியை மீட்கும் காட்சிகள்:

மருத்துவர் அன்புமணியின் கண்டனப்பதிவு:

மருத்துவர் தமிழிசை சவுந்தர்ராஜனின் கண்டனம்:

முதல்வர் மு.க ஸ்டாலினின் கண்டனப் பதிவு: