Youth Killed by Gang: பிணையில் வெளியே வந்த இளைஞர் துள்ளத்துடிக்க நடுரோட்டில் கொடூர கொலை; திருச்சியில் பயங்கரம்.!

கடந்த ஆண்டு கொலை வழக்கில் சிக்கி, சமீபத்தில் பிணையில் வெளியே வந்த இளைஞர் ஒருவரை 5 பேர் கும்பல் கொடூரமாக கொலை செய்த சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

Youth Killed by Gang: பிணையில் வெளியே வந்த இளைஞர் துள்ளத்துடிக்க நடுரோட்டில் கொடூர கொலை; திருச்சியில் பயங்கரம்.!
Vishnu Murdered Near Kodiyalam on 15-Nov-2024 (Photo Credit: @PolimerNews X)

நவம்பர் 16, ஜீயபுரம் (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜீயபுரம், கொடியாலம், மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கணபதி. இவரின் மகன் விஷ்ணு (வயது 24). ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். வெள்ளிக்கிழமையான நேற்று, காலை சுமார் 9 மணிக்கு மேல், விஷ்ணு கொடியாலயத்தில் இருந்து சத்திரம் நோக்கி பயணித்த பேருந்தில் பயணம் செய்தார்.

திரைப்பட பாணியில் கொடூர கொலை:

அரசுப் பேருந்து திண்டுக்கரை இரயில்வே கேட் பகுதிக்கு வந்தபோது, பேருந்தின் பின்புறம் இருசக்கர வாகனத்தில் 5 பேர் கும்பல் வந்துள்ளது. இந்த கும்பலில் ஒருவர் பேருந்தில் ஏறி, விஷ்ணுவை கீழே தள்ளிவிட்டார். இதனை சற்றும் எதிர்பாராத விஷ்ணு கீழே விழுந்ததும், ஐவர் கும்பலும் அவரை கத்தி, அரிவாள் போன்ற ஆயுதத்தால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் திட்டத்தை செயல்படுத்தி, திரைப்பட பாணியில் பயங்கர கொலை அரங்கேற்றப்பட்டது. Petrol Bombing: 'அமரன்' படம் திரையிட்ட, நெல்லை அலங்கார் சினிமாஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; காவல்துறை விசாரணை.! 

சிதறியோடிய பயணிகள்:

இந்த சம்பவத்தில் நிகழ்விடத்திலேயே அவர் துள்ளத்துடிக்க உயிரிழந்த நிலையில், இதனைக்கண்ட பயணிகள் அலறி ஓடினர். பின் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த ஜீயபுரம் காவல்துறையினர், விஷ்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறை விசாரணை:

தடயவியல் நிபுணர்களும் குற்றவாளிகளின் அடையாளங்களை சேகரித்து இருக்கின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கொலையான விஷ்ணு கோகுல் என்பவரின் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் பழிக்குப்பழியாக கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. Girl Sexually Harassed: 25 வயது இளம்பெண் பலாத்கார முயற்சி; வீட்டுக்கு அழைத்து கோவை பேராசிரியர் பகீர் செயல்..! 

பழிக்குப்பழியாக சம்பவம்?

அதாவது, ஜீயபுரம் பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பவர், விஷ்ணுவின் உறவுக்கார பெண்ணுடன் தவறான தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த விஷயத்தை அறிந்த விஷ்ணு கோகுலை கண்டித்த நிலையில், அவர் கள்ளக்காதலில் உறுதியாக இருந்த காரணத்தால் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் தொடர்புடைய விஷ்ணு, தற்போது பழிக்குப்பழியாக கொல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கோகுல் உயிரிழந்து ஓராண்டு சமீபத்தில் நிறைவுபெற்ற நிலையில், பிணையில் வெளியே வந்த விஷ்ணு கொல்லப்பட்டுள்ளார்.

(The above story first appeared on LatestLY on Nov 16, 2024 10:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).